Friday, March 18, 2011

This monthy Blessing Word


ஜெபக்குறிப்பு :


 2011 தமிழ்நாட்டின் தேர்தலுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
தேவ காரியம் நம் தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும்.
Tuesday, March 15, 2011

பொது மொழிபெயர்ப்பு

அன்பானவர்களே
பைபிள் உருவானது பற்றியும், அது தமிழில் மொழியாக்கம் செய்தது பற்றியும் கண்டோம், இதில் மிக முக்கியமாக ஒரு விசயத்தை சொல்ல வேண்டும்; அனேகர் தமிழ் வேதாகமத்தை மொழியாக்கம் செய்ய தங்கள் உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் பற்றிய செய்திகளையும், அவர்களது மொழியாக்கதையும் சொல்ல முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன், (நுனிப்புல் மேய்வது போல படிப்பவர்களும், சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தினால் தான்) மன்னித்துக் கொள்ளுங்கள்.

இந்த கட்டுரையில் மிக முக்கியமான புதிய மொழி பெயர்ப்பைப்பற்றி காண்போம்;

மறைதிரு ராஜரீகம் (1907‍ 1978) 
இவர் நெல்லையில் பிறந்தவர், இவர் இறையியலில் இரண்டு பட்டங்களும், தமிழ் இலக்கியத்தில் இரண்டு பட்டங்களும் செற்றிருந்தார், தமிழ், ஆங்கிலம், எபிரெயம், கிரேக்கம் ஆகிய நான்கு மிழிகளில் புலமை பெற்றவர். இவரே பைபிளை நல்ல தமிழில் மொழிபெயர்த்த முதல் தமிழர்.

இவர் லுத்தரன் இறையியல் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்பு இவருக்கு மொழியாக்கப்பணி கொடுக்கப்பட்டது. இதனால் தன் பனியைத் துற‌ந்து மொழியாக்கப்பணியை செய்யத் தொடங்கினார். இவரது குழுவில் பன்மொழி அறிஞர்களும், பன்னாட்டு இறையியல் மேதைகளும், இருந்தனர், நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்தார்.

இவர் இதற்கு முன் வந்த மொழியாக்கங்களைக் க‌ருத்தில் கொள்ளாமல் முற்றிலும் புதிய எளிய தமிழ் நடையில் மொழிபயர்ப்பு செய்தார். இவர் தலைமையில் அமைக்கப்பட்ட்ட குழுவால் 1975 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பகுதி வெளிவந்தது. முதலில் நான்கு சுவிஷேச நூல்களும், பின்னர் 1978ல் சங்கீதம் இனந்த புதிய ஏற்பாடும், மேலும் நீதிமொழிகள் 1976லும், ரூத் 1977லும் வெளிவந்தன. இவர் தனியாளாக பழைய ஏற்பாட்டை மொழிப்யர்த்து விட்டார், குழுவாக எசேக்கியேல் வரை மொழிபெயர்த்துவிட்டார்கள். ஆனால் ஆதியாகமம் அச்சில் இருந்த போது இடைவிடாத பணியால் ஓய்வெடுக்க முடியாமல் இருந்ததால் இரத்த அழுத்தம் அதிகமாகி முகுளத்தில் இரத்த நாளம் வெடித்து 1978ம் ஆண்டு ஜனவரி திங்கள் 24ம் நாள் உயிர் துறந்தார்,

அன்று முதல் இன்று வரை தமிழில் இவருக்கு இனையான அறிஞர் எவரும் இல்லாததால் இவர் விட்டுச் சென்ற பணி முடியாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இந்த பணி நிறைவடைந்தால் தமிழில் மிக மிக பொக்கிஷமாக ஓர் மொழி பெயர்ப்பு தமிழ் கிறிஸ்தவர்களாகிய நமக்கு கிடைக்கும். இதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

இது சீர்திருத்த கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள், ஆகிய இருவருக்கும் பொதுவானதாக வடிவமைக்கப் பட்டுள்ளதால் இதற்கு பொது மொழிபெயர்ப்பு என்று பெயர் வந்தது.

அன்பானவர்களே இந்த பைபிள் வரலாறு என்ற தொடர் பைபிள் குறித்த அனேக சந்தேகங்களையும், பைபிள் குறித்த நம்பகத்தன்மையையும் வளர்த்திருக்கும் என்று கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறேன். இன்று அனேக முறையில் பைபிள்கள் வந்து விட்டன. நல்ல தமிழ் விளக்கங்கள்,ஒலிவடிவ பைபிள், குறுந்தகடாகவும், கைபேசியில் படிக்கவும் கேட்கவும் வசதிய்ள்ள வேதாகமம், இன்னும் மெமரி கார்டுகளில் அடக்கும் மிகச்சிரிய வடிவிலால பைபிள் மென்பொருட்களும் நம் தாய் மொழியிலேயே மிகவும் மலிவாக கிடைக்கப் பெறுகிறது, இனி வேதத்தை வாசிப்பதிலும் தியானிப்பதிலும் யாரும் சாக்கு போக்கு சொல்ல முடியாது... ஆனால் எதற்காக வேதத்தை வாசிக்க வேண்டும் என்று நாம் அறிந்து கொள்ளாதவரை வேதத்தை வாசிக்க வேண்டும் என்ற தாக்கம் நமக்குள் குறைவாகவே இருக்கும்,

எதற்காக வேதத்தை வாசிக்க வேண்டும்?
பைபிள் தேவனுடைய வார்த்தை தான் என்பதை ஆதாரங்களுடன் தெளிவாக அறிந்தோம், இந்த வார்த்தைகள் நமக்கும் இருந்தால் நாம் தீமைகளை அதிர்த்து நிற்க மிகவும் உதவியாய் இருக்கும், இயேசு கிற்ஸ்து கூட தன்னை சோதிக்க வந்த பிசாசை பைபிளின் மோசேயின் ஆகமத்திலுள்ள வச்னைங்களை வைத்து வெற்றி கொண்டார் என்று அறிகிறோம், இன்று சாத்தானின் வலையில் அனேகர் விழுந்து தங்கள் சமாதானத்தையும் நிம்மதியையும் தொலைத்துக் கொள்கிறார்கள் இவர்கள் இவர்கள் இம்மை வாழ்கையை மட்டுமல்ல இந்த உலக வாழ்க்கைக்குப் பின்னும் பரலோக ராஜ்ஜியத்தில் பங்குகொள்வதும் அறிதாகி, பிசாசுகளின் வதை கூடங்களாகிய நரகத்தில் பங்கடைவார்கள், இப்படிப்பட்ட நிலை நமக்கு வராமல் இருக்க வேண்டுமானால், பவுல் சொன்னது போல வேத வசனங்களை பிசாசுக்கு விரோதமான ஆயுதமாக பயன்படுத்தவே நாம் தினமும் வேதத்தை வாசித்து தியானிக்க வேண்டும். இனி தினமும் வேத வாசிப்பு உங்கள் வாழ்வின் அன்றாட செயல்களில் ஒன்றாக இருக்கட்டும் ஆமேன்.

இந்த கட்டுரையோடு பைபிள் வரலாறு என்ற தொடர் நிறைவடிகிறது மிக விரைவிலேயே ஓர் புதிய தலைப்பில் சந்திப்போம் காத்திருங்கள்...........

புழக்கத்தில் இருக்கும் தமிழ் பைபிள் யாரால் எப்போது மொழிபெயர்க்கப்பட்டது?


அன்பானவர்களே இதுவரை பைபிளை யார் எழுதினார்கள் அது காலத்திற்கேற்ப திருருத்தப்பட்டதா? ஏன் கத்தோலிக்கர்கள் பயன்படுத்தும் பைபிளில் கூடுதல் புத்தகங்கள் இருக்கின்றன? தமிழ் மொழி வளர்ச்சியில் பைபிளின் பங்கு ஆகியவற்றை தெளிவாக அறிந்தோம். சமீபத்தில் ஒரு புத்தகத்தைப் படித்தேன். தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பைபிள் கிரேக்கு எபிரேயு மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்படவில்லை என பொய்யான வாதத்தை முன் வைத்திருந்ததைக் கன்டு வேதனை அடைந்தேன், இந்த பதிவு இந்த உண்மையைத் தெளிவாக்கும் என்று கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறேன்,

ஹென்றி பவர் 1813 - 1888

பழைய மொழியாக்கங்கள் சரிவர புரியாமல் இருந்ததால் மொழியாக்கப் பணியை அருட்செய்தி அமைப்பினர் பவர் என்பவரின் பொறுப்பில் ஒப்படைத்தனர்.

அவர் யார்?


ஹென்றி பவர் வாழ்க்கை சுருக்கம்

இவர் 1813ம் ஆண்டு ஜனவரி 13இல் இந்தியாவில் பிறந்தார். இவரது தந்தை பிரஞ்சு போர் வீரரான பிரான்யோயிஸ் பூவியர். இவர் இந்தியாவில் ந‌டந்த போரில் கைதியாக்கப்பட்டு இந்தியாவில் தங்கினார், பின்னர் ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சிந்தாதிரிப்பேட்டை சியோன் ஆலய வளாகத்தில் இவர்களது வீடு இருந்தது, பவர் அவர்கள் இங்குதான் பிறந்தார். இவரது தாயைப்பற்றிய வேறு விபரங்கள் தெரியவில்லை, பவர் அவர்கள் இங்கிலாந்தில் கல்வி கற்றவர்1837ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். திருப்பாச்சூரில் போதகராகப் பணியமர்த்தப்பட்டார்.

பின்னர் சென்னை புரசைவாக்கம் வந்தார்.1858ல் தமிழ் பைபிளை திருத்தி மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டார். 1864ம் ஆண்டு சென்னை சூளை தூய பவுல் ஆலய போதகராக நியமிக்கப்பட்டார், நியமிக்கப்பட்ட ஆண்டு (1864) இவர் அடிக்கடி திருச்சி, திருநெல்வேலி மீண்டும் சென்னை சாந்தோம் போன்ற இடங்களுக்கு மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தார். இதனால் மனமடிவாகி உடல் நலம் குன்றி 1888ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருக்குற்றாலத்தில் உயிரிழந்தார்.

இவர் அறிந்திதிருந்த மொழிகள்: 
கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிரதம், ஆங்கிலம், தமிழ், கன்னடம், ஹிந்தி, ஆகியவைகள் ஆகும், இவர் மூல மொழியிலிருந்தே பைபிளை மொழியாக்கம் செய்தார்.

இவர் வெளியிட்ட வேறு நூல்கள்:
நன்னூல், பகவத் கீதை, ஆகியவற்றை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தார். வேத அகராதியை வெளியிட்டார். ( தமிழ் ஆங்கிலம் அகராதியை முதன் முதலில் வெளியிட்டவர் நாம் முன் பதிவில் கண்ட மொழிபெயர்ப்பாளர் பெப்ரிஷீயஸ் அவர்கள் ஆவார்) இன்னும் சில நூல்களயும் வெளியிட்டார்.

ஐக்கிய திருப்புதல்
பவர் அவர்கள் வெளியிட்ட பைபிளுக்கு ஐக்கிய திருப்புதல் என்று பெயர் உண்டு காரணம் இவரது மொழிபெயர்ப்புக் குழுவில் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த அனேகர் இருந்தனர்.

1871ல் பவர் திருப்புதல் முழு வேதாகமாக வெளியிடப்பட்டது

பிழைகள்
ஒரு மொழி 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழைய சொற்கள் மறைந்து புதிய சொற்கள் புழக்கத்தில் வரும் அந்த வகையில் கிட்டத் தட்ட 140 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த மொழியாக்கத்தில் அனேக வழக்கொழிந்த சொற்களும், அந்தக் கால‌த்தில் புழக்கத்தில் இருந்த இப்போது தமிழர்கள் மறந்துவிட்ட ஏராளமான வடமொழி சொற்களும் இருக்கின்றன. மேலும் சொற்பிழைகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது

உதாரணம்
குதிகாலை நசுக்குவாய் (கடிப்பாய்) ஆதி:3;15, மேற்கொள்ளுதல் (சங்:12;4) மேற்கொள்ளுதல் என்ற சொல் பொறுப்பேற்றல் என்ற பதத்தில் ஆளப்பட்டுள்ளது. இலக்கணப்பிழைகள்: பன்றிகள் மேய்ந்து கொன்டிருந்தது (கொன்டிருந்தன) வட சொற்கள்: ஜனங்கள், புருஷன், ஸ்த்ரீ, சந்தோஷம், போன்றவை.

பவர் திருப்புதல் 1915 ஆம் ஆண்டு புதிய திருத்தங்களுடன் வெளிவந்த போது அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது, திருத்தப்பட்ட பவர் பைபிள் வெளி நாட்டில் அச்சிடப்பட்டு அதன் பிரதிகள் கப்பலில் வந்துவிட்டன. ஆனால் அன்றைய தமிழ் கிறிஸ்தவர்கள் கடலில் தூக்கி எறிந்துவிட்டனர். ஏனெனில் அக்காலத்தில் மக்கள் விரும்பிப் படித்தது பெப்ரீஷியஸ் மொழியாக்கத்தைதான்.

எபிரேயத் தமிழ் நடை (கிறிஸ்தவ தமிழ் நடை) உருவான வரலாறு


அன்பானவர்களே நீன்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, கடந்த பதிவில் சீகன் பால்க் பைபிளை தமிழில் மொழி பெயர்க்க எடுத்துக்கொண்ட சிரமங்கள் பற்றி பார்த்தோம் இந்த பதிவில் தமிழ் மொழி எழுத்து சீர்த்திருத்தங்களுடன் தமிழில் வந்த முதல் பைபிள் வரலாறு பற்றி பார்ப்போம், மேலும் "கீதவாத்தியங்கள் இசைத்தான், கின்னரம் வாசித்தான், தாழ்ச்சியடையேன், நடனம் பண்ணினாள்," தேனில் பலாப்பழத்தை ஊற வைத்த சுவையுடைய எபிரேயத்தமிழ் வந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு.......

பெஞ்சமின் சூல்ச்
சீகன் பால்க் விட்டுச்சென்ற பணியை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சூல்ச் என்பவர் தொடர்ந்து செய்தார்,இவருக்கு உதவியாக ஒரு பிராமனர் இருந்தார் இவர்கள் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் பணி செய்தார், 1727 ஆம் ஆண்டு இவர் முழு பைபிளையும் வெளியிட்டார், தள்ளுபடி ஆகமங்களையும் இவரே முதன் முதலில் வெளியிட்டார்,

சூல்ச் அவர்களும் சீகன் பால்க் பயன்படுத்திய கொச்சையான தமிழையே பயன்படுத்தினார், இது பிழைகள் நிரம்பியதாக இருந்தாலும், தமிழில் புத்தகமே இல்லாமல் இருந்த அந்த நாட்களில் இது இமாலய வெற்றியாகும்.

தமிழ் எழுத்து சீர்திருத்தம்
தமிழ் எழுத்துக்கள் பனை ஓலையில் தனி நபரின் கையெழுத்துக்க்கு ஏற்ப வடிவம் மாறி இருந்தது என்றும் பொதுவான அச்சுவடிவம் இல்லை என்றும் நாம் ஏற்கனவே கண்டோம், இது பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்ட நாட்களிலேயே சீரக்கப்பட்டது, போர்ச்சுகீசியரான "கான்ஸ்டைன் பெஸ்கி" இவரைத்தான் எல்லோரும் இவரை வீரமாமினிவர் என்று அழைப்பார்கள். இவரே தமிழில் தற்போது நடைமுறையில் இருக்கும் எழுத்து சீர்திருத்தம் செய்தவராவார், மேலும் இவருக்கு பிறகு அமெரிக்க அருட்பனி இயக்கத்தின் தலைவராக இருந்த "ஹென்டர்" என்பவர் தான் சீரற்று இருந்த தமிழ் எழுத்துக்களுக்கு சீரான அச்சு வடிவத்தை உருவாக்கினார், இது அடுத்து வந்த தமிழில் பைபிளை மொழியாக்கம் செய்தவர்களுக்கு பேறுதவியாக இருந்த்தது,

பெப்ரிஷீயஸ் அவர்கள்
இவர் 1740ம் ஆண்டு தமிழ் நாட்டில் கடலூருக்கு வந்தார், இவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார், இவர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே தமிழில் தொடர்ந்து மூன்று மணி நேரம் சொற்பொழிவு ஆற்றவும், எழுதவும் படிக்கவும் தெரிந்தவராவார். மேலும் இவர் ஜெர்மன், கிரேக்கு, எபிரேயு, இலத்தீன், ஆங்கிலம், ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றவராவார், இத்தகைய திறமையாளர்தான் தமிழில் பைபிளை அடுத்த மொழியாக்கம் செய்ய அனுப்பப்பட்ட மிஷனரி ஆவார். மேலும் இவர் வீரமாமுனிவரின் சீர்திருத்த எழுத்துக்களையே பயன்படுத்தினார்.

மேலும் பெப்ரீஷியஸ் மிகவும் பயபக்தியுடன் முழங்காலில் நின்றே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டார். மொழியாக்கப்பணிக்காக கடைசி வரை இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. சீகன் பால்க் மொழியாக்கம் இவருக்கு பேருதவியாக இருந்தது, அதிலுள்ள பிழைகளை நீக்கினார். இருபது ஆண்டுகாலம் கடுமையாக உழைத்து ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரை உள்ள தொகுதியை வெளியிட்டார். 1791 ஆண்டு இவர் உயிர் நீத்தார். இவரது கல்லறை இப்போதும் சென்னை வேப்பேரியில் உள்ள தூய மத்தியாஸ் ஆலய வளாகத்தில் உள்ளது.

சீகன் பால்கை போலவே இவரது கடின உழைப்பினால் வெளிவந்த முதல் பைபிளை இவரும் காண்வியலாமல் போனது, இவர் மொழிபெயர்த்த முழுவேதாகமும் 1840‍ ல் வெளியானது, இதுவே தற்போது புழக்கத்திலிருக்கும் கிறிஸ்தவ தமிழ் நடை ( எபிரேயத்தமிழ் நடை) உருவாகக் காரணமாக இருந்தது. இவரது மொழிபெயர்ப்புக்கு பொன் திருப்புதல் என்று பெயர்,

இதெல்லாம் சரி இப்போதிருக்கும் தமிழ் பைபிளை இரண்டாம் பக்கம் திருப்பினால் அங்கே Tamil O.V.(அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு) என்று எழுதப்பட்டிருக்கும் இதற்கான‌ காரண‌மும், தற்போது புழக்கத்தில் இருக்கும் தமிழ் பைபிளை மொழியாக்கம் செய்தது யார்? எப்போது மொழியாக்கம் செய்யப்பட்டது? என மிக விரைவிலேயே அடுத்த பதிவில் காண்போமா?....


தமிழ் மொழியில் முதல் பைபிள் யாரால் எப்போழுது மொழிபெயர்க்கப்பட்டது?ஜெருசலேம் ஆலயம்
அன்பானவர்களே! சென்ற பதிவில் தமிழ்மொழி வளர்ச்சியில் பைபிளின் பங்கு குறித்து விரிவாக அறிந்து கொண்டோம். தமிழ் மொழியில் முதல் பைபிளை மொழிபெயர்த்தது ஒரு ஜெர்மானியர் ஆவார். அவருடைய பெயர் பர்த்தலமேயு சீகன் பால்கு ஆவார். இவர் தன்னுடைய 24 வயதில் 1706 ம் ஆண்டு தமிழ் நாட்டில் தரங்கம்பாடி என்ற இடத்தில் வந்திறங்கினார், இவர் கட்டிய ஆலயத்தின் பெயர் ஜெருசலேம் ஆகும் இதுவே தமிழகத்தின் முதல் பிராட்டஸ்டண்ட் திருச்சபை ஆகும். (இவரது முழு வரலாற்றை அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்) இந்த மிஷனரியே முதன்முதலில் தமிழில் ஒரு அச்சு நூலான பைபிளை வெளியிட்டார்,
சீகன் பால்குவின் கடின முயற்சி
இன்று நான் இந்த கட்டுரையை எழுவதற்கு பல நூல்கள் துனைபுரிகின்றன, ஆனால் அந்தக் காலகட்டத்தில் எந்த நூலும் இவருக்கு உதவிக்கு இல்லை, மேலும் அவரது தாய் மொழி ஜெர்மன் ஆகும், இதனால் தமிழைக்கற்க ஒரு திண்ணைப் பள்ளியில் சேர்ந்தார், அங்கே மணலில் தமிழ் எழுத்துக்களை எழுதப்பழகிக் கொண்டார். பின்பு ஓரளவுக்கு தமிழ் கற்றுக் கொண்டபின் பைபிளை ஜெர்மானிய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கத் தொடங்கினார்,
அச்சு இயந்திரத்தை கப்பலில் வரவழைத்து அதோடு ஒரு அச்சுத்தொழிலாளியையும், தேவையான அளவு காகிதங்களையும் வரவழைத்தார், ஆனால் வரும் வழியிலேயே அச்சுத்தொழிலாளி இறந்துவிட கடினமான தேடுதலுக்குப் பின் ஒரு அச்சு தெரிந்த படைவீரனைக் கண்டுபிடித்து தமிழ் அச்சுக்களை இவரே உருவாக்கி அச்சடிக்கத் தொடங்கினார். இவர் தயாரித்த தமிழ் அச்சுக்கள் மிகப்பெரிதாக இருந்த்தால் காகிதம் பாதியிலேயே தீர்ந்துபோனது. ஆனாலும் விடா முயற்சியுடன் 1715ஆம் ஆண்டு ஜூலை15 ஆம் நாள் பைபிளின் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார், இதுவே தமிழில் வந்த முதல் அச்சுவடிவ புத்தகம் ஆகும்,
இந்த மொழிபெயர்ப்பின் குறைகள்
இந்த மொழிபெயர்ப்பு முற்றிலும் சீகன் பால்கு அவர்களின் சீரீய முயற்சியிலேயே உருவாக்கப்பட்டது, மேலும் தமிழின் வேறு எந்த உரைநடை அச்சு புத்தகமும் இல்லாத்தால் இவருக்கு தெளிந்த வார்த்தைகள் எதுவும் கிடைக்கவில்லை, ஆகவே சாமானியர்கள் பயன்படுத்தும் கொச்சை தமிழிலேயே புத்தகத்தை வெளியிட்டார். மேலும் முந்தைய பதிவில் நாம் பார்த்தபடி தமிழ் மொழி எழுத்துக்கள் இடைவெளியில்லாமலும், மெய் எழுத்துக்கள் புள்ளியில்லாமலும் இருந்த்து மேலும் இவர் பயன்படுத்திய வார்த்தைகள் சில தவறானவைகளாக இருந்தது.
இவர் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகள் சில; உளுகாதிருந்தான்,
தற்போதைய வார்த்தைகள்
சீகன் பால்கு பயன்படுத்தியது
தேவன்
சர்வேசுவரன்
அப்பம்
கஞ்சி
கழுதை
நீசவாகனம்
ஆவி
ஸ்பிரித்து
இது போன்ற சில குறைகள் இருந்தாலும் இவரது முயற்சி முதல் வெற்றி ஆகும், ஆனால் முழு வெற்றிக்கு முன்பே இவரது 37 வது வயதில் இவர் காலமானார்.
சரி இப்போது நாம் பயன்படுத்தும் பைபிளில் எபிரேயு மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே இதை மொழியாக்கம் செய்தது யார்? என்பதை அடுத்த பதிவில் காண்போம் காத்திருங்கள்..................

தமிழ் மொழி வளர்ச்சியில் பைபிள்
'தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி' என்று பெரியார் அவர்கள் சொன்னதாகக் கேள்வி அவர் என்ன, சூழ்னிலையில் சொன்னாரோ எனக்குத் தெரியாது, ஆனால் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தமிழ் மொழி நடையைப் நீங்கள் ஒருவேளை படிக்க நேருமானால் நீங்களும் அப்படித்தான் சொல்வீர்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்... நான் எதோ தமிழன்னையை கொச்சைப்படுத்துவதாக யாரும் நினைத்துவிடவேண்டாம்,

உதாரனமாக:
அயிசூரியமுடைத்தனயிருக்கிறயதெருமனுஷனௌணடயிருந்தனஅவனசகலத
துகளையுமவிலையெறபபெததபிடவைகளையுமதரிசசிக்கெணடுஅனு
தினமுமசநததெஷபபடடுபிறுதபிசசுககொனடிருநதன
இப்படித்தான் தமிழ் இருந்த்து அதாவது மெய் எழுத்துக்கள் மேல் புள்ளி (க்,ங்)இல்லாமலும் வார்த்தகளுக்கு இடையே இடைவெளி இல்லாமலும் வாக்கியக்குறி இல்லாமலும் (கெ, கே, கொ, கோ) போன்ற எழுத்துக்களில் உள்ள நெடில் வேறுபாடுகள் இல்லாமலும் இருந்தது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் எழுத்துக்களின் பொதுவான வடிவம் என்ற தெளிவான வடிவம் இல்லாமல்
அவரவர் கையெழுத்து பழக்கத்திற்குத் தக்க வடிவிலேயே தமிழ் இருந்தது,

இப்போது நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மொழி நடை எழுத்துக்கள், மற்றும் எழுத்துக்களின் அச்சு வடிவம் ஆகியவை தமிழில் பைபிளை மொழிபெயர்க்கும் போது மாற்றி அமைக்கப்பட்டவையே,

இதுமட்டுமல்ல தமிழில் முதன்முதலில் சொல்-அகராதி உருவாக்கப்பட்ட்தும் பைபிள் மொழிபெயர்ப்பின் போது தான், அதுமட்டுமல்ல 1500 மொழிகள் வழக்கத்தில் இருக்கும் இந்தியாவில் முதன்முதலில் தமிழிலேயே பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது, அதுமட்டுமல்ல ஆசிய மொழிகளில் தமிழிலேயே முதன்முதலில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது, அதுமட்டுமல்ல முதன் முதலில் தமிழில் வெளி வந்த அச்சு புத்தகம் பைபிள்தான், இப்படிப்பட்ட சிறப்புக்கள் மிகுந்த தமிழில் மொழியாக்கம் செய்ய சில நூற்றாண்டுகள் சென்றன மேலும் பலர் இந்த அருமையான பனிக்காக தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் செலவிட்டுள்ளனர், இது பற்றிய விருவிருப்பான வரலாற்றுத் தொகுப்பினைத்தான் அடுத்துவரும் பதிவுகளில் பார்க்க இருக்கிறோம் படித்து உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள்,

பைபிளில் மறைக்கப்பட்ட நூல்கள்

பைபிளில் மறைக்கப்பட்ட நூல்கள்

இதுவரை நாம் பைபிள் குறித்து விரிவாகப்பார்த்து வந்தோம் இப்போது மிகவும் முக்கியமான பகுதிக்குள் கடந்து வந்திருக்கிறோம், அதாவது கத்தோலிக்க வேதாகமத்த்தில் உள்ள சில புத்தகங்கள் மறுமலர்ச்சி கிறிஸ்தவர்கள் வேதாகமத்தில் இல்லாமல் இருப்பதற்கான ஒரு முக்கியமான வரலாற்று உண்மையை அறிந்துகொள்ள இருக்கிறோம்.

இதற்கு முன்பாக கேனான் (Canan) என்ற சொல்குறித்து அறிந்துகொள்வோம், இந்த சொல் இந்த வேறுபாட்டிற்கு ஒரு முக்கியமான சொல் (இது கேமரா நிறுவனத்தின் பெயர் அல்ல) ஆகும், கேனான் என்பது நானல் குச்சி என்பது அர்த்தமாகும் பழைய ஏற்ப்பாட்டில் எஸ்ரா பல்வேறு காலகட்ட்த்தில் எழுத்தப்பட்ட நூல்களைத் தொகுத்ததாகக் காண்கிறோம். அப்போது எஸ்ரா அமைத்த குழுவுக்கு எழுதுவதற்குப் பயன்படும் "நானல் குச்சி" என்ற பொருளுடைய கேனான் என்று வைத்தார்கள்,

எஸ்ரா தொகுத்த பழைய ஏற்பாட்டு பாலஸ்தீன் நாட்டில் உள்ள யூதர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தது, அது கிரேக்க மொழி பெயர்ப்பில் 22 ஆகமங்களாக பிரிக்கப்பட்டிருந்த்து என்ன புதுசா குழப்பரீங்கன்னு நீங்க கேட்பது புரிகிறது, எஸ்ரா தொகுக்கும் போது நியாயாதிபதிகளும் ரூத்தும் ஒன்றாக இருந்த்து, எரேமியாவும் புலமபலும் ஒன்றாக இருந்த்து சிறிய தீர்க்கதரிசிகள் பனிரெண்டு புத்தகங்களும் ஒன்றாக இருந்த்து அதுபோல் சாமுவேலும் ராஜாக்கள் புத்தகமும் ஒன்றாக இருந்தது, எனவே பாலஸ்தீனாவில் புலக்கத்திலிருந்த இந்த 22 ஆகமங்களும் கிரேக்க தொகுப்பின் போது 39 ஆகப் பிரிக்கப்பட்ட்து இதைத்தான் பாலஸ்தீன் யூதர்கள் ஏற்றுக்கொள்கின்றனர், இந்த அடிப்படியில் தான் புரோட்டஸ்டண்ட்கள் பயன்படுத்தும் பைபிளில் பழைய ஏற்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ளது,

அப்படியானால் கூடுதல் ஆகமங்கள் எப்படி வந்தன?
பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமான மல்கியாவிற்கும் இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கும் சுமார் 400 ஆண்டுகள் இடைவெளி இருந்தது, அக்காலகட்டம் பெர்சியா ஆட்சியின் கடைசிக் காலகட்டமாகும், அதேபோல கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களின் ஆட்சியின் தொடக்க்காலமாகும் இக்காலகட்ட்த்தில் யூதர்கள் வேறு நாடுகளுக்கு சிதறடிக்கப்பட்டனர், அப்போது எகிப்து நாட்டின் அலெக்ஸ்சான்ட்ரியா நாட்டில் குடிபெயர்ந்த யூதர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர், அக்காலகட்டத்தில் அவர்கள் குடிபெயரும் போது சில நற்போதனைப் புத்தங்களையும் எடுத்துச் சென்றனர். மேலும், அந்த நானூறு ஆண்டுகால வரலாற்று நூலான 1மக்க பேயர், 11மக்கபேயர், ஆகிய 14 நூல்களை மொத்தமாக மொழி பெயர்த்து விட்டனர் இந்த நூல்களே கத்தோலிக்க வேத்த்தில் உள்ள அதிகப்படியான ஆகமங்களாகும்,

புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?அன்பானவர்களே இது வரை பைபிளில் பழைய ஏற்பாடு பற்றி விரிவாகப்பார்த்தோம், இதில் பழைய ஏற்பாட்டின் தொன்மை குறித்தும், அது எப்படித் தொகுக்கப்பட்டது என்பது குறித்தும் பார்த்தோம் இப்போது, புதிய ஏற்பாட்டு ஆகமங்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததா? இடையில் ஏதாவது திருத்தங்கள் செய்யப்பட்டதா? அதில் சொல்லப்பட்ட செய்திகள் உண்மையானவைகளா? அல்லது இடைச்செருகல் ஏதாவது இருக்கிறதா? என்பது பற்றி அறிவியல் ரீதியாக ஆராய்ந்து நம் சந்தேகங்களைத்தீர்த்துக் கொள்வோம்.

புதிய ஏற்பாட்டு நூல்கள் கிபி 40 முதல், கிபி 100 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவைகள் ஆகும், சிலர் இது வெகு காலத்திற்கு முன் எழுதப்பட்டது, மேலும் கிறிஸ்தவம் செல்வாக்கு மிக்கதாக இருந்த காலத்தில் ஏதாவது மாற்றி எழுதப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்புகின்றனர், இதற்கு உலகில் தற்போதும் நடைமுறையில் இருக்கும் பழங்கால நூல்களின் ஸ்திரத்தன்மையை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் "மூலப்பிரதிகள் விமர்சன அறிவியல்" மூலமாக ஆராய்ந்தவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது பற்றி தெளிவாகக் காண்போம்,

மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் வேதாகம விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள், Are the New Testament Documents Reliable? என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,

" மூலப்பிரதிகள் விமர்சன அறிவியல் மூலமாக புதிய ஏற்பாட்டை எழுதிய ஆசிரியர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை நமக்கு எவ்வளவு அதிகமாக மூலப்பிரதிகள் கிடைக்கின்றனவோ அதன் அடிப்படையில் நாம் புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மையை மிக மிகத் தெளிவாக அறிய முடியும், எப்படி எனில் மற்ற பிற வரலாற்று தொன்மையான நூல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது புதிய ஏற்பாட்டு அச்சுப்பிரதிகள் எத்தனை அதிகம் என்று பட்டியலிட்டுக் காட்டுகிறார், இதோ அந்தப்பட்டியல்...

வரலாற்று நூல்:
எப்போது எழுதப்பட்டது:
நமக்கு கிடைத்த முதல்
பிரதி எழுதிய வருடம்:
கால இடைவெளி
பிரதிகளின் எண்ணிக்கை:
ஹெரோடேடஸ்
கி.மு488-428
கி.பி900
1300
8
துஸிடிடீஸ்
கி.மு, 460 - 400
கி.பி 900
1300
8
டாஸிடஸ்
கி.பி 100
1100
1000
20
சீசரின் காலிக்போர்
கி,மு, 58 - 50
கி.பி 900
950
9-10
லிவியின் ரோம வரலாறு
கி.மு. 59 - கி,பி 17
கி.பி 900
900
20
புதிய ஏற்பாடு
கி.பி 40 - 100
கி.பி 130 (முழு அச்சுப் பிரதிகள் கி.பி 350)
300
கிரேக்கு 5000+
லத்தீன் 10,000
பிற 9300

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நூல்கள் அனைத்தும் உலக வரலாற்றில் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது, இதில் சீசரின் காலிக் போர் என்ற நூல் சீசரின் காலத்திற்கு பிறகு சுமார் 900 ஆண்டுகள் கழித்தே எழுதப்பட்டிருக்கிறது எனபதை புரூஸ் சுட்டிக்காட்டுகிறார். லிவியின் ரோம வரலாறு நமக்கு 20 பிரதிக்கும் மேல் கிடைக்கவில்லை. அதன் முதல் பிரதி கி.பி.900 ஆண்டைச் சேர்ந்தது. டாஸிடஸ் எழுதிய 14 வரலாற்று நூல்களில் வெறும் 20 பிரதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன அவர் எழுதிய நடபடிகள் என்ற பதினாறு நூல்கள் வெறும் இரண்டு அச்சுப்பிரதிகள் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவை. அதில் ஒரு அச்சுப்பிரதி 9ம் நூற்றாண்டையும் மற்றொன்று 11‍ம் நூற்றாண்டையும் சார்ந்தவை. தூஸிடிடீச் படைப்புகள் கி.பி. 900 ஆண்டைச் சேர்ந்த எட்டு பிரதிகளை மட்டுமே முழுக்க முழுக்க ஆதாரமாகக் கொண்டவை, ஹெரோடேடஸ் வரலாற்றின் நிலையும் இதுவே ஆகும், இவைகள் பெரும் கால இடைவளி கொண்டவை என்ற போதும் வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போதைய வரலாறு இதன் அடிப்படையிலேயே சொல்லப்படுகிறது.


ஆனால் புதிய ஏற்பட்டு நூல்களைப் பொருத்தமட்டில் நமக்கு ஏராளமான மூல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. புதிய ஏற்பாடு கி.பி.40‍ 100க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்படிருக்கக் கூடும். கி.பி.350 என்று தேதியிடப்பட்ட முழுமையான‌ புதிய ஏற்பாட்டு அச்சுப்பிரதிகள் கூட நமக்கு கிடைத்திருக்கின்றன.(கால இடைவெளி வெறும் 300 ஆண்டுகள் மட்டுமே)கி.பி 130 என்ற தேதியில் யோவான் எழுதிய சுவிசேசம் ஒரு பகுதி பிரதியும், 5000க்கும் மேற்பட்ட கிரேக்கு அச்சுப்பிரதிகள்,10,000 க்கும் மேற்பட்ட இலத்தீன் அச்சுப் பிரதிகள், 9,300 க்கும் மேற்பட்ட பிற அச்சுப்பிரதிகள், இன்னும் ஆதித் திருச்சபை பிதாக்களின் எழுத்துக்களில் 36,000க்கும் மேற்பட்ட மேற்கோள்கள் உள்ளன.

மூலப்பிரதிகள் விமர்சனத்தில் முக்காலத்திலும் சிறந்தவர் என்று போற்றப்படும் F.J.A. ஹோர்ட் கூறினார்: " புதிய ஏற்பாட்டின் மூலப் பிரதியானது தன‌க்கு ஆதாரமாக அமைந்துள்ள வகைவகையான முழுமையான சான்றுகளில், பண்டைய வசன நடை எழுத்துக்களிலேயே முழுக்க முழுக்க உன்னதமானதாகவும், வேறு எதுவும் தன் அருகில் நெருங்கக் கூட முடியாத அளவிற்கு மிகுந்த மேன்மை வாய்ந்ததாகவும் உள்ளது"

இந்த துறையில் தலைசிறந்து விளங்கும் சர் ஃபிடரிக் கென்யான் என்பவரை மேற்கோள் காட்டி F.F. புரூஸ் சான்றுகளைத் தொகுத்துத் தருகிறார்:

முதன் முதலாக பிரதி இயற்றப்பட்ட தேதிக்கும் முதன் முதலாக நமக்கு கிடைத்துள்ள பிரதியில் காணப்படும் தேதிக்கும் இடையேயுள்ள கால இடவெளி அவ்வளவு முக்கியமல்ல என்று கருதப்படக் கூடிய அளவிற்கு மிகச் சிறிதாகும். வேத வாக்கியங்கள் காலங்கள் கடந்த பின்னரும் அவை முதலில் எழுதப்பட்ட வண்ணமாகவே நம் கையில் கிடத்திருக்கின்றன என்பதில் சந்தேகத்தை கிளப்பக்கூடிய ஆதாரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டாயிற்று, புதிய ஏற்பாட்டு நூல்களின் உண்மை (அசல் தன்மை) மற்றும் பொதுவான நேர்மை ஆகியவை நிரூபிக்கப்பட்டு நிறுவப்பட்டாயிற்று என்று கொள்ளலாம்.

அன்பானவர்களே புதிய ஏற்பாட்டின் அசல் தன்மை குறித்து அறிஞர்கள் சொன்னதை தெளிவாக அறிந்திருப்பீர்கள் என்று விசிவாசிக்கிறேன், இனி அடுத்து வரும் பதிவுகளில் தமிழ் மொழியில் பைபிள் மொழிபயர்க்கப்பட்ட விருவிருப்பான வரலாற்ரினைக் காண்போம் காத்திருங்கள்......

ஆங்கிலத்தில் பைபிள்

ஜான் விக்ளிஃப்
இன்று விதவிதமான ஆங்கில வேதாகமங்களைப் பார்க்கிறோம். இது பலரின் இரத்தத்தில் வந்த்துதான் இந்த மொழியாக்கம்.சீர்திருத்த்த்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுவபர் ஜான் விக்ளிஃப் இவர் மார்டின் லூத்தர் கிங் அவர்களுக்கு முந்தினவர், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியரான இவர் ஒவ்வொரு மனிதனும் தன் தாய் மொழியில் பைபிளை வாசிக்கவேண்டும் என வாஞ்சையுள்ளவர், அதோடு மட்டுமல்ல லத்தீன் மொழிபெயர்ப்பான வால்கேட்டிலிருந்து ஆங்கிலத்திற்கு பைபிளை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம் அச்சடிக்கும் முறை கிடையாது ஆகவே கையெழுத்துப்பிரதியாகவே வெளியிட முயன்றார், ஆனால் அதற்கு முன்னதாகவே மரித்துப் போனார்.
இதற்குப்பின்பு அவரது நன்பர்கள் ஒருசில திருத்தங்களுடன் அந்த மொழியாக்கத்தை வெளியிட்டனர் இதுவே ஆங்கிலத்தில் வந்த முதல் வேதாகமம் ஆனால் அச்சுவடிவில் வெளிவரவில்லை. இந்த வேதாகமங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவைகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தண்டனை
இந்த மொழிபெயர்ப்பை வெளியிட்டதற்காக ஜான் விக்ளிஃப் அவர்களுக்கு இறந்த பிறகு தண்டனை வழங்கப்பட்டது, என்ன வினோதமாக இருக்கிறதா? ஆம் இறந்து 17 ஆண்டுகளுக்கு அவரது கல்லறை தோண்டப்பட்டு பாராளுமன்ற உத்தரவுப்படி தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டது ஆனால் இது போன்ற அச்சுருத்தல்கள் மொழியாக்கப் பணிகளை சிறிதும் பாதிக்கவில்லை.
டிண்டேல் வேதாகமம் (1525) (இதுவே முதன்முதலில் அச்சுவடிவில் வெளிவந்த அச்சு வடிவ வேதாகமம்)
1525 ஆம் ஆண்டு புதிய ஏற்பாடும் அதைத்தொடர்ந்து 1536ஆம் ஆண்டு மற்ற சில புத்தகங்களும் வெளிவந்தன, ஆனால் இந்த மொழிபெயர்ப்புக்காக 1536 ஆம் ஆண்டு அக்டோபர் 6ல் எட்டாம் ஹென்றியின் ஆனைப்படி டிண்டேலை கம்பத்தில் கட்டிவைத்து உயிரோடு தீயிட்டுக்கொளுத்தினார்கள், “கர்த்தாவே இங்கிலாந்து மன்ன்னின் கண்களைத்திறந்தருளும் என்று வீர முழக்கமிட்டு அவர் தீக்கிரையானார்,
டிண்டேலின் நண்பர் கவெர்டேல் என்பவர் மற்ற புத்தகங்களையும் அச்சிட்டு மற்றொரு பதிப்பை வெளியிட்டார் இதுவே ஆங்கிலத்தில் வந்த முழு அச்சிடப்பட்ட பைபிள்.
இதில் குறிப்பிட்த்தக்க விசயம் என்னவென்றால், இவர்களது மொழிபயர்ப்பை இங்கிலாந்து திருச்சபையோ அல்லது மன்ன்னோ அங்கீகரிக்கவில்லை என்பதுதான். ஆங்கில மக்களோ தாய்மொழியில் வேதத்தைப்படிக்க வேண்டும் என்று துடியாய்த் துடித்தார்கள். எதிர்ப்புகள் இருந்தாலும் எட்டாம் ஹென்றிக்கு அர்ப்பணம் என்று அடுத்தடுத்து இரண்டு பதிப்புகள் வெளிவந்தது.
கிரான்மர் மொழியாக்கம்
இதைத் தொடர்ந்து ரோஜர்என்பவர் மத்தேயு என்ற பெயரில் மற்றொரு திருப்பத்தை கொண்டு வந்தார், இதற்கு கிரான்மர் என்ற பேராயர் முகவுறை எழுதியிருந்தார். இதன் சிறப்பு என்னவென்றால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு என்ற அடைமொழியோடு வந்தது தான். இதன் பலனாய் மக்கள் மத்தியில் பைபிளைப் படிக்கும் ஆர்வம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஒவ்வொரு இல்லங்களிலும் பைபிள் தனியிட்த்தைப் பெற்றது.

கிங் ஜேம்ஸ் வெர்சன் (KJV)
டிண்டேலின் ஜெபம் கேட்கப்பட்ட்தற்கான காலம் கனிந்த்து 1603 ஆம் ஆண்டு மாமன்ன்ன் ஜேம்ஸ் இங்கிலாந்து அரசனானான். அனைவரும் படிக்க நல்ல பைபிள் மொழிபெயர்ர்பு வேண்டும் என மக்கள் மன்ன்னிடம் முறையிட்டனர், இதன் விளைவாக 1604 ஆம் ஆண்டு மகா சபை கூட்டப்பட்டு, எடுக்கப்பட்ட முடிவின்படி 54 ஆங்கிலப்புலமை பெற்ற ஆங்கில பண்டிதர்கள் இதற்காக நியமிக்கப்பட்டனர் இதன் விளைவாக நல்லதொரு வேத மொழியாக்கம் உருவாக்கப்பட்டது இதுவே கிங் ஜேம்ஸ் வெர்சன்(K J V) இப்போது ஏராளமான மொழிபெயர்ப்புகள் வந்து விட்ட பின்பும் இந்த கிங் ஜேம்ஸ் வெர்சன் இன்றைய ஆங்கில முறைக்குத் தக்கதாக மாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது.
இனி அடுத்த பதிவில் மறைக்கப்பட்ட மறை நூல்கள் பற்றி அறிந்துகொள்வோமா? (பின் குறிப்பு: ஆங்கில மொழியாக்கம் முழுமையானது அல்ல சுருக்கப்பட்ட வரலாறு ஆகும்)

உலக மொழிகளில் பைபிள்

உலக மொழிகளில் பைபிள்
ஒரு கருத்து உலக அளவில் பிரபலமாக வேண்டுமானால் அது உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவேண்டும், ஆனால் உலக மக்களோடு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் ஒரு கால கட்டம் வரை அதாவது பல நூற்றாண்டுகள் வரை மூல மொழிகளைத்தவிர வேறு எந்த மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படவில்லை. இதற்கு இரன்டு அடிப்படைக் காரனங்கள் உண்டு யகோவா தேவன் இஸ்ரவேலரராகிய நமக்கு மட்டுமே சொந்தம் அவருடைய வாக்குத்தத்தங்களும் உடன்படிக்கையும் நமக்கெ உரியது என இஸ்ரவேல் மக்கள் நினைத்தனர், இரண்டாவது காரணம் பல நூற்றாண்டுகள் இஸ்ரவேல் மக்கள் எபிரேய மொழியைத்தவிர வேறு எந்த மொழியையும் பேசவில்லை.

கிரேக்க‌ சாம்ராஜ்ஜியம்
உலக வரலாற்றில் பாபிலோனிய ஆட்சிக்குப்பின் மாபெரும் வல்லரசாக உருவானது பெர்சிய பேரரசு ஆகும் இதன் எல்லைகள் எத்தியோபியா முதல் இந்தியா வரை நீண்டிருந்தது என எஸ்தர் 1;1ல் வாசிக்கிறோம். அதன் பின் எழும்பிய கிரேக்கப் பேரரசு உலக அளவில் கலை இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சியை உருவாக்கியது, இந்த பேரரசில் சிதறிக்கிடந்த இஸ்ரவேலர்கள், கிரேக்கப் பேரரசின் தாக்கத்தால் எபிரேய மொழியைவிட கிரேக்க மொழியையே அதிகமாகப் படிக்க ஆரம்பித்தனர்.

ஜெதுவஜித்து (LXX)
கிமு 3ஆம் நூற்றாண்டில் எகிப்பதை ஆண்ட தாலமி11(பிலடல்பஸ்) என்ற மன்னன் கிரேக்க மொழியில் பைபிளை மொழியாக்கம் செய்யவேண்டும் என விரும்பினான், அதன் படி இஸ்ரவேல் கோத்திரத்தில் கோத்திரத்திற்கு ஆறு பேர் வீதம் மொத்தம் எழுபத்திரெண்டு அறிஞர்களைத் தேர்வு செய்து நியமித்தான், அவர்கள் எழுபத்திரண்டே நாட்களில் எபிரேய மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு மொழிமாற்றம் செய்தனர், இதற்கு எழுபது எனப் பெயர் கொள்லும் வகையில் ஜெப்துவஜித்து (Septuagint) எனப் பெயரிட்டனர், இந்த மொழியாக்கம் எகிப்திலுள்ள அலெக்சான்டிரியா நகரில் நடந்தது.

மூலமொழி புத்தகத்திற்கும் கிரேக்க மொழி பெயர்ப்புக்கும் உள்ள வேறுபாடு
நீங்கள் ஒரு வேறுபாட்டை பைபிளில் கவனித்திருப்பீர்கள் அதாவது கத்தோலிக்க பைபிளில் கூடுதல் ஆகமமும் நாம் வைத்திருக்கும் பைபிளில் பழைய ஏற்பாட்டில் 39 ஆகமமும் மட்டுமே இருக்கும், இதற்கு காரனம் இந்த ஜெப்துவஜிந்து தான், அதாவது இஸ்ரவேலர்களில் தாயகமான பாலஸ்தீனாவில் புழ‌க்கத்திலிருந்த எபிரேய வேத்தத்தில் 39 புத்தகம் மட்டுமே இருந்தது ஆனால் எகித்து அலெக்சாண்டிரியாவில் மொழியாக்கம் செய்யப்பட்ட வேதத்தில் சில கூடுதல் புத்தகங்கள் சேர்க்கப்பட்டன‌.
இந்த‌ கூடுத‌ல் புத்த‌க‌ங்க‌ளை இயேசு கிறிஸ்துவோ அப்போஸ்த‌ல‌ர்க‌ளோ ஏற்றுகொள்ள‌வில்லை ஆகவே தான் அவைக‌ளை த‌ள்ளுப‌டி ஆக‌ம‌ங்க‌ள் அல்ல‌து விடுப‌ட்ட‌ ஆக‌ம‌ங்க‌ள் அல்ல‌து ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌றை நூல‌க‌ள் என்று சொல்லுகிறோம், இது ஏன் விடுப‌ட்ட‌து? இதில் எதேனும் முர‌ன்பாடுக‌ள் இருக்கிற‌தா என்ப‌தை அடுத்து வரும் அத்தியாயங்களில் கான‌லாம் இப்போது மற்ற மொழிபெய‌ர்ப்புக‌ள் ப‌ற்றி இங்கே காண்போம்,

கிரேக்க‌ மொழியாக்க‌த்திற்குப் பிற‌கு வேத‌ம் ம‌ற்ற‌ மொழிக‌ளில் சில‌ நூற்றாண்டுகால‌ம் மொழியாக்க‌ம் செய்ய‌ப்ப‌ட‌வில்லை

சீரியாக் மொழியாக்க‌ம்
சீரியாக் என‌ப்து மெச‌ப‌டோமியாவில் ச‌ம‌வெளிப் ப‌குதியில் வாழ்ந்த‌ ம‌க்க‌ள் பேசிய‌ ஒருவ‌கை மொழியாகும், இந்த‌ மொழியில் கிபி முத‌ல் நூற்றாண்டில் வேத‌ம் மொழியாக்க‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து இத‌ற்கு பெசிட்டா மொழியாக்க‌ம்
என்று பெய‌ர் பெசிட்டா என்றால் 'சாதார‌ன' என்று பொருளாகும்.


வால்கேட்
கிபி 2ஆம் 3ஆம் நூற்றாண்டில் ரோம‌ப் பேர‌ர‌சு வ‌லுப்பெற்றிருந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் ல‌த்தீன் மொழி உல‌க‌ அள‌வில் அதிக‌மாக‌ப் பேச‌ப்ப‌ட்ட‌து இத‌னால் ல‌த்தீன் மொழியில் மொழியாக்க‌ம் செய்ய‌ப்ப‌ட‌ வேண்டிய‌து கால‌த்தின் க‌ட்டாய‌மாக்க‌ப்ப‌ட்ட‌து கிபி நான்காம் நூற்றாண்டில் ஜெரோம் என்ப‌வ‌ர் கிரேக்க‌ மொழியிலிருந்து ல‌த்தீன் மொழிக்கு வேத்தத்தை மொழியாக்க‌ம் செய்தார். அவ‌ர் முத‌லில் புதிய‌ ஏற்பாட்டையும் பின் ப‌ழைய‌ ஏற்பாட்டையும் கிரேக்க‌ மொழியிலிருந்து லத்தீன் மொழிக்கு மொழியாக்கம் செய்தார். இதற்கு வால்கேட் என பெயர் வால்கேட் என்றால் பொதுமக்களுக்கு உரியது எனப் பொருள்படும்.

வால்கேட் வெளிவந்து சுமார் 10 நூற்றாண்டுகள் (100 ஆண்டுகள்) வேறு எந்த மொழியாக்கமும் பிரதானமாக வெளிவரவில்லை அதற்கு காரணம் பொதுமக்களுக்கு உரியது என பெயரிடப்பட்ட வால்கேட் பொதுமக்கள் வாசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது கார‌ண‌ம் ம‌க்க‌ள் ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு வித‌த்தில் புரிந்து கொண்டு விள‌க்க‌ம‌ளித்த‌தால் குருமார்க‌ள் ம‌ட்டுமே ப‌டிக்க‌ வேண்டும் என‌ அறிவுருத்த‌ப்ப‌ட்ட‌து. அது ம‌ட்டும‌ல்லாம‌ல் ல‌த்தீன் மொழி தெய்வீக‌ மொழி என்றும் அதில் தான் வேத‌ம் ப‌டிக்க‌ வேண்டும் என்ற‌ க‌ட்டுக்க‌தைக‌ள் நில‌வி வ‌ந்த‌தால் மொழியாக்க‌ம் த‌டைப‌ட்டுக் கிட‌ந்த‌து.

இந்த‌ நிலை சீர்திருத்த‌த் த‌ந்தை மார்டீன் லூத‌ர் கிங் அவ‌ர்க‌ள் ல‌த்தீன் வேத‌த்தை ஜெர்ம‌ன் மொழியில் வெளியிடும் கால‌ம் வ‌ரை நீடித்த‌து.

மேலும் சில‌ மொழியாக்க‌ங்கள்

காப்டிக் மொழியாக்க‌ம்
ஜெப்துஜிந்திலிருந்து காப்டிக் என்ற‌ ப‌ழமையான‌ எகிப்தின் புதிய‌ எழுத்து ந‌டையில் மொழியாக்க‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து இந்த‌ மொழியாக்க‌ம் இப்போதும் கீழை எகிப்தில் புழ‌க்க‌த்தில் உள்ள‌து.

கோதிக் மொழியாக்க‌ம்
ஜெர்ம‌ன் மொழிகுடும்ப‌த்தில் மூத்த‌ முத‌ல் மொழிபெய‌ர்ப்பு இதுவாகும் இதை பேராய‌ர் உல்பிலாஸ் என‌ப‌வ‌ர் கிபி 4ஆம் நூற்றான்டில் வெளியிட்டார்.

இன்று வித‌வித‌மான‌ ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்புக‌ளைக் காண்கிறோம் இத‌ன் ஆர‌ம்ப‌த்தைக் கேட்டால் நீங்க‌ள் அழுதுவிடுவீர்க‌ள் அடுத்த‌ ப‌திவில் அதையும் காண்போம்.......

பைபிளில் புதிய உடன்படிக்கை யாரோடு செய்யப்பட்டுள்ளது?

அன்பானவர்களே பைபிளில் ஏற்பாடு என்ற சொல்லுக்கு உடண்படிக்கை எனபதை முந்தைய கட்டுரையில் அறிந்தோம், மேலும் பழைய உடண்படிக்கை பன்டைய மெசபடோமியா நாகரீகத்தில் வாழ்ந்து வந்த ஆபிரகாம் என்ற பக்திமானோடு செய்யப்பட்டது என அறிந்தோம், இனி புதிய ஏற்பாடு(உடன்படிக்கை) பற்றி இங்கே காண்போம்,

புதிய உடன்படிக்கை யாரால் ஏற்படுத்த‌ப்பட்டது?
நாம் பழைய உடன்படிக்கை பற்றிய முந்தைய கட்டுரையில் ஆபிரகாமுடன் கடவுள் செய்து கொண்ட ஒப்பந்ததின் படி, கடவுளின் எதிர்பார்ப்புப்படி வாழ்ந்த ஆபிரகாமின் வம்சத்தில் வந்த யூத குலத்தில் உலகமக்களின் பாவத்திற்கு பலியாகி உலகமக்களின் நல்வாழ்கையை உறுதி செய்ய அனுப்பப்பட்ட மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவே புதிய உடன்படிக்கைக்கான ஆதாரம், அவரே இந்தப் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.

புதிய உடன்படிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
புதிய உடன்படிக்கை என்பது மனித இனத்திற்கு ஒரு மிகப்பெரிய கிடைப்பதற்கரிய ஓர் ஒப்பற்ற சொத்து ஆகும், இதில் மனிதன் சாகாமல் நித்தியமான வாழ்வு பெற்றுக்கொள்ள முடியும், எப்படி ஒன்றும் புரியவில்லையா? மேலே படியுங்கள் புரிந்துவிடும், அதாவது கடவுள் பரிசுத்தமாய்ப் படைத்த மனிதனின் வாழ்வில் பிசாசு மனித இனத்தில் பாவம் என்ற நஞ்சை விதைத்தான். இதனால் மனிதன் திருடு, பொய், சூது அன்பின்மை, விபசாரம், போன்ற பாவங்களில் விழுந்தான், அவனுடைய பாவத்தினால் மனிதன் பாவத்தின் சம்பளமான தண்டனையை அடைந்து வந்தான், இதனால் மனமிறங்கிய கடவுள் மனிதனின் பாவங்களுக்காக தானே இந்த பூமிக்கு வந்து குற்றமில்லாதவராய் வாழ்ந்து மிகவும் சித்ரவதைப்பட்டு மான்டார், ஒரு மனிதன் தன் இயல்பிலேயே உள்ள தீய குண‌ங்களினால் செய்த குற்றங்களுக்குத் தண்டனை அடைய விரும்பமாட்டான், ஆகவே அவனது பாவங்களை இயேசுவிடம் ஒப்படைத்து விட்டால் இம்மையிலும் மறுமையிலும் அவன் அடையவேண்டிய தண்டனையிலிருந்து தப்பலாம்,
மனிதன் இந்த உடன்படிக்கையில் பங்குகொள்ளச் செய்யவேண்டியது என்ன‌?
இந்த உடன்படிக்கையில் பங்குள்ளவர்களாக மாற மனிதனிடம் கடவுள் எதிர்பார்ப்பது மிகவும் சிறியதாகும் அவை:

1. தேவக் குமாரனாம் இயேசுகிறிஸ்துவிடம் தாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களைக் கூறி மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும்

2. முன் கட்டுரையில் கண்ட பத்து கட்டளையோடு நம்மில் நாம் எவ்வளவு அன்பு செலுத்துகிறோமோ அப்படியே மற்றவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் இவையே மனிதன் இந்தப் புதிய உடன்படிக்கையில் பங்கு பெறச் செய்ய வேண்டியவை ஆகும்.

புதிய உடன்படிக்கையில் பங்கு பெற்றால் என்ன நன்மை?
இந்தப் புதிய உடன்படிக்கையில் மனிதன் பங்கு பெற்றால் பிசாசினால் உண்டாகும் தீமைகளான, பரம்பரைச்சாபம், நோய்கள், பற்றாக்குறைகள், நிம்மதியின்மை, சமாதானமற்ற நிலை, தீயப்பழக்கங்களுக்கு அடிமையாதல், இன்னும் பல தீமைகளிலிருந்து விடுதலை அடைய முடியும் மேலும் இந்த உலக வாழ்வின் முடிவில் மரனமில்ல நித்திய வாழ்வை அடைய முடியும்.

நித்திய வாழ்வு என்றால் என்ன‌?
அதென்ன நித்திய வாழ்வு என நீங்கள் கேட்பது புரிகிறது நீங்கள் பாவமற்றவராய் வாழ்ந்தால் உங்கள் உடலுக்கு மட்டுமே மரனம் வரும், உங்கள் ஆத்மாவிற்கு அல்ல உங்கள் ஆத்துமா கடவுளோடு இன்பமான பரிசுத்த நிலையில் சொல்ல முடியாத சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் முடிவிள்ளா நாட்களோடு இளைப்பாரும்.

இந்தப் புதிய உடன்படிக்கையில் பங்கு பெறாவிட்டால் என்ன ஆகும்?
நாம் கடவுளின் இந்தப் புதிய உடன்படிக்கையில் பங்குபெறாவிட்டால், அல்லது குறைந்த பட்சம் நம்செயல்களிலாவது இந்த உடன்படிக்கையைக் கைக்கொள்ளாவிட்டால் நாம் பிசாசின் பிடியில் இருப்போம் அப்போது திருடுதல், பொய்சொல்லுதல், விபச்சாரம் செய்தல், பெருமை, கொலை, போன்ற பாவங்களைச் செய்து பிசாசின் மகனாய் வாழ்ந்து சாபம், நோய்கள், சமாதானமின்மை, இன்னும் பல இன்னல்களை நாமும் நம் சந்ததியும் அனுபவிப்பதோடு மட்டுமல்ல இறப்பில் நித்திய இளைப்பாறுதலுக்குச் செல்லாமல் பிசாசினோடு இனைந்து கடவுளின் நியாயதீர்ப்புக்கு ஆளாகவேண்டும்,

இயேசுவை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதுமா?
இல்லை என்பது தான் பதில் நாம் நம் பாவங்களை இயேசு கிறிஸ்துவிடம் கொடுத்துவிட்டால் மட்டும் போதாது நம் செயலில் உடன் மேலே சொன்ன உடன்படிக்கையில் கடவுளின் எதிர்பார்ப்பையும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.

இந்த புதிய உடன்படிக்கை யாருடன் செய்யப்பட்டுள்ளது?
இந்த உடன்படிக்கை இந்த உலகில் பிறந்த நம் ஒவ்வொருவரோடும் செய்யப்பட்டுள்ளது. சரி இதுவரை பைபிளில் இரு பெரும் பிரிவாகவுள்ள பழைய ஏற்பாடு மற்றும் பதிய ஏற்பாடு பற்றி சுருக்கமாகப் பார்த்தோம் இனி இந்த பைபிள் எப்படி யூத மக்களின் வழக்கு மொழிகளான அராமிக், எபிரெயம், கிரேக்கம், ஆகிய மொழிகளில் இருந்து உலக மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்றை அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாமா?

பைபிளில் ஏற்பாடு என்றால் என்ன‌?

ஏற்பாடு என்றால் என்ன‌?
அன்பானவர்களே சென்ற கட்டுரையில் பைபிள் யாரால்
எழுதப்பட்டது என அறிந்தோம், மேலும் பைபிள் என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லாகும்.

இது இரண்டு பெரும் பகுதிகளாகப்பிரிக்கப்பட்டிருக்கிறது, அவை பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகும். ஏற்பாடு என்ற‌ சொல்லுக்கு "உட‌ன்படிக்கை" என்று பொருள். உடன்படிக்கையா? யார் யாருடன் செய்துகொண்ட உடன்படிக்கை என நீங்கள் கேட்பது புரிகிறது. சரி இது பற்றி விரிவாகப் பார்ப்போமா?

பழைய உடன்படிக்கை (பழைய ஏற்பாடு)
பைபிளில் உள்ள பழைய உடன்படிக்கை கடவுளிடத்தில் விசுவாசம் வைத்திருந்த
பெரிய மனிதரான ஆபிரகாமோடும் அவருடைய சந்ததியினரோடும் செய்து கொண்டதாகும், வரலாற்றில் சுமார் 4000ம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உடன்பாடு ஏற்பட்டது, பழம் பெரும் நாகரீகமான மெசபலோமியாவில் வசித்து வந்தவர் ஆபிரகாம், அவர் பக்திமான், அவரின் பக்தியைக் கண்ட கடவுள் அவருடன் உடன்படிக்கை செய்து கொண்டார், இதுவே பழைய ஏற்பாடாகும்.
விருத்தசேதனம் (சுன்னத்)தோன்றிய வரலாறு
கடவுளுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின் விவரமாவது: மெசபடோமியாவிலிருந்து ஆபிரகாம் கானான் என அழைக்கப்பட்ட பாலஸ்தீனா நாட்டிற்கு இடம் பெயரவேண்டும், (மெசபடோமியாவின் மொழி பழமையான எபிரேயு ஆகும். இந்த மொழியைப் பாலஸ்தீனா நாட்டில் ஆபிரகாமும் அவரது குடுப‌மும் பேசியதால் அவர்கள் எபிரேயர்கள் என அழைக்கப்ப்பட்டனர்,) மேலும் பாலஸ்தீனாவை கடவுள் ஆபிரகாமுக்கும் அவரது சந்ததிக்கும் கொடுப்பேன் என வாக்குப் பண்ணினார், மேலும் ஆபிரகாமை மிகப்பெரிய ஜாதிகளுக்குத் தகப்பனாக மாற்றுவேன், என்று வாக்குக் கொடுத்தார், மிக மிக முக்கியமாக இந்த உலகத்தில் பிசாசினாலும் வானவெளிகளில் உள்ள பொல்லாத ஆவிகளாலும் ஏற்பட்ட பாவங்களால் மக்கள் துன்பப்படுவதை மாற்ற ஒரு மீட்பரையும் ஆபிரகாமின் சந்ததியிலே தருவதாகவும் வாக்குறுதி அளித்தார், இந்த உடன்படிக்கையின் அடையாளமாக ஆபிரகாம் விருத்த சேதனம்பன்னிக்கொண்டார், இது முதற்கொண்டு ஆபிரகாமின் வம்சத்தினர் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு விருத்த சேதனம் பண்ணினார்கள். மோசேயின் காலத்தில் ஆபிரகாமின் சந்ததியினர்கள் நடக்கவேண்டிய சட்டங்களை தேவன் கொடுத்தார். இதில் மிகவும்முக்கியமானது "பத்துக் கற்பனைகள்" ஆகும், இந்த சட்டங்களில் கடவுளின் எதிர்பார்ப்பு இருத்தது, சில சமயம் ஆபிரகாமின் வம்சத்தினர் மீறியபோது அதற்கான தண்டனையைப்பெற்றுக்கொண்டனர்.
ஆபிரகாமின்வம்சம்
வெகு நாள் பிள்ளையில்லாமல் இருந்த ஆபிரகாமின் மனைவி தன் அடிமைப் பெண்னை ஆபிரகாமுக்கு மணமுடித்தார், அவள் எகிப்தை சேர்ந்தவள், அவளுக்கு இஸ்மவேல் என்ற மகன் பிறந்தான், அவன் முரடனாய் இருந்தான், அதன் பின் ஆபிரகாமின் நூராவது(100) வயதில் அவன் மனைவி கருவுற்று ஈசாக்கைப் பெற்றாள், ஈசாக்கு ஏசா, யாக்கோபை(இஸ்ரவேல்) பெற்றான், இவர்கள் இருவரையும் கடவுள் இரண்டு மிகப்பெரிய ஜாதிகளாக்குவதாக வாக்குக் கொடுத்தார்.
இஸ்ரவேல் வம்சம்:
இஸ்ர‌வேலுக்கு ரூப‌ன், சிமியோன், லேவி, யூதா, தான், ந‌ப்த‌லி, காத், ஆசேர்,
இச‌க்கார், செபுலோன், யோசேப்பு, பெண்யமீன், ஆகியோர் இருந்தனர், இதில் யூதா தவிர மற்ற அனைவரும் கடவுளின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பு கொடுக்காமல் போனதால் அவர்கள் வாக்கு மாறா தேவனிடத்தில் தங்கள் ஆசீர்வாதங்களை இழந்து போனார்கள், ஆனாலும் தங்களுக்கு கடவுள் வாக்குக் கொடுத்த மேசியாவை(மீட்பர். கிறிஸ்து) அவர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள்.
உடன்படிக்கை நிறைவேறுதல்
கடவுள் சொன்ன படி ஆபிரகாமின் வம்சத்தை மிகப்பெரிய ஜாதியாக்கினார்,
மேலும் கானான் (பாலஸ்தீனா)தேச‌த்தையும் கொடுத்தார், மேலும் தன்னுடைய சட்டங்களை ஒழுங்காகக் கடைபிடித்த யூத வம்சத்தில் இந்த உலகின் பாவங்களுக்காக தன்னையே பலியாகக் கொடுத்து பாடுபட்டு மரித்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் கொடுத்தார், இதுவே பழையஏற்பாடு(உடன்பாடு) ஆகும்.
புதிய ஏற்பாடு(உடன்படிக்கை) யாருடன் செய்யப்பட்டது? இந்த பைபிளில் சில புத்தகங்கள் நீக்கப்பட்டதாமே? அவைகள் எவைகள்? ஏன்அவைகள் நீக்கப்பட்டன? மற்ற உலக மொழிகளில் வேதம் மொழிபயர்க்கப் பட்டது எப்படி?அடுத்த கட்டுரைகளில் காண்போமா?

பைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது?

பழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு
தோரா
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா? தேவனுடைய தாசனாகிய மோசே எழுதிய ஆதியாகமம், யாத்திராகமம்,லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம், ஆகிய ஐந்து புத்தகங்கள் மட்டுமே எபிரேயமக்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்தது இதை அவர்கள் தோரா என அழைத்து வந்தார்கள், இதுதான் பைபிளின் ஆரம்பமாகும், இதைத்தான் இயேசு கிறிஸ்துவும் மோசேயின் ஆகமங்கள் என்று சொல்கிறார். அதன்பின் வந்த காலங்களில் யோசுவா, சாமுவேல், காத், எஸ்ரா போன்ற தீர்க்கதரிசிகள் மூலம் தேவன் கொடுத்த செய்திகள் எல்லாம் தனித்தனியாகப் பிரிந்து கிடந்தன, நேபுகாத் நேச்சார் காலத்தில் பாபிலோன் நாட்டிற்கு இந்த எபிரேயர்கள் அடிமைகளாய் சிறைப்பட்டு போய் மீண்டும் தங்கள் தாய் நாட்டிற்கு வந்த பின்னால் எஸ்ரா என்ற வேத அறிஞர் இவைகளை ஒன்றாகத்திரட்டி ஒரு புத்தகமாக்கினார். இது எபிரேயம் மற்றும் அரமாயிக் மொழியில் இருந்தது
புதிய ஏற்பாடு தோண்றிய வரலாறு
நான் முன்னமே சொன்னபடி இயேசு கிறிஸ்துவின் காலத்திலும் அதன் பின் முதல் நூற்றாண்டு காலத்திலும் புதிய ஏற்பாடு என்ற ஒன்று இல்லை, பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இதுவே ஆதி திருச்சபை மக்களுக்கு வேதமாக இருந்தது, அதே சமயத்தில் சபை கூடி வருகிறபோது கிறிஸ்துவின் வரலாற்றைச் சொல்லும் நற்செய்தி நூல்கள் மற்றும் அப்போஸ்தலர்களின் கடிதங்கள் வாசிக்கப்பட்டன. இப்படி இன்றிரண்டு நூற்றாண்டுகள் கடந்தபின்னால் இவைகள் தொகுக்கப்பட்டு புதிய ஏற்பாடு என்று அழைக்கப்பட்டது.

இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை
பழைய ஏற்பாடு என்பது ஓர் அடிப்படை இது இல்லாமல் புதிய ஏற்பாடு இல்லை காரணம் அதில் உள்ள தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் தான் புதிய ஏற்பாடாகும், அதே ச‌மயம் பழைய ஏற்பாடு மட்டும் போதுமானதல்ல அது ஒரு ஆரம்பமே அதன் முடிவு புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளது இவைகள் தனித்தனி தொகுப்புகள் என்றாலும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்தவை ஆகும்.

யாரால் எழுதப்பட்டது?
சரி இனி முக்கியமான கட்டத்திற்கு வருவோம் இந்த புத்தகங்கள் மனிதர்களால் எழுதப்பட்டது தான் ஆனால் அதில் தொடக்கம் முதல் முடிவு வரை எழுதப்பட்ட‌ காலமும், எழுதப்பட்ட மனிதர்களின் மொழி பன்பாடு நாகரீகம் கல்வியறிவு ஆகியவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகள். இவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் சொல்லப்பட்ட தகவல்கள் ஒரே மாதிரியானவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்தவை, என்ன ஒன்றும் புரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள புரிந்து விடும்

அதாவது பைபிளில் முதல் புத்தகம் முதல் கடைசிப் புத்தகம் வரை எழுத சுமார் 1600 (ஆயிரத்து ஆறுனூறு) ஆண்டுகள் ஆனது, மேலும் எழுதிய மனிதர்களும் முற்றிலும் மாறுபட்டவர்கள் அதாவது மோசே போன்ற தீர்க்கதரிசிகள் எஸ்ரா போன்ற ஆசாரியன். தாவீது போன்ற அரசர்கள், தானியேல் போன்ற அமைச்சர்கள், பவுல் போன்ற அறிஞர்கள், பேதுரு போன்ற மீனவர்கள், லூக்கா போன்ற மருத்துவன், என பலதரப்பட்ட 40 மனிதர்களால் எழுத்தப்பட்டது தான் பைபிள், மேலும் இவர்கள் வாழந்த காலமும் இடமும் ஒன்றோடு ஒன்று முற்றிலும் மாறுபட்டவை.

எழுதப்பட்ட மொழிகள்
அதோடு அல்லாமல் எழுதப்பட்ட மூல மொழிகளிலும் வேறுபாடுகள் உண்டு பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதிகள் எபிரேய மொழியிலும், சில பகுதிகள் அரமாயிக் மொழியிலும் எழுத்தப்பட்டது, புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டது இப்படி பன் மொழியில் எழுதப்பட்டதுதான் பைபிள், ஒரு வேளை இவைகள் வேறு வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் எழுதப்பட்ட இடங்கள் ஒன்றாக இருக்குமோ என நீங்கள் நினைப்பது தெரிகிறது அதுதான் இல்லை

எழுதப்பட்ட இடங்கள்
மோசே பாலஸ்தீனாவிற்கு வெளியே எழுதினார். கானான் தேசத்தில் பலர் எழுதினார்கள், பாபிலோனிலிருந்தும், தாவீது பாலைவனத்திலிருந்தும் அரச சிம்மாசனத்திலுமிருந்தும், புதிய ஏற்பாட்டுக் கடிதங்களை ஆசிய ஐரோப்பிய கண்ட முக்கிய நகரங்களில் இருந்தும் எழுத்தப்பட்டது

பைபிளின் ஆசிரியர்
என்னங்க இது யார் யாரோ எங்கெங்கிருந்தோ எழுதியதாகச் சொல்கிறீர்கள் அப்படியானால் இது எப்படி ஒரே புத்தகமாக இருக்க முடியும் என நீங்க நினப்பது தெரிகிறது, நீங்கள் நினைப்பது போல் இந்த புத்தகங்கள் எழுதியவர்கள் வேறு வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்னிலையில் வாழ்ந்திருந்தாலும், இதில் எப்படி ஒற்றுமை வந்தது, என அறிவது மிகவும் முக்கியமான காரியம்।,ஆம் மருத்துவனாக இருந்தாலும் கல்வி வாசனை இல்லாத மீனவனானாலும் அறிஞனானாலும் ஒரே நோக்கத்தில் ஒரே அறிவோடு எழுதக் காரணம் திரித்துவ கிறிஸ்துவின் ஒருவராகிய பரிசுத்த ஆவியானவரே இந்த ஒற்றுமைக்கு காரணம், ஆம் அவரே இதை எழுதிய மனிதர்களில் நிறைந்து எழுதுவித்தார்।

ஆகவே தான் இது தொடக்கம் முதல் இறுதிவரை பின்னிப் பினைந்திருக்கிறது, அதாவது பைபிளில் தொடக்க வசனமான ஆதியாகமம் முதல் அதிகாரத்தைப் பார்த்தால், "ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்" என்று சொல்லப்படுள்ளது. அதே போல கடைசி புத்தகமான வெளிப்படுத்தல் கடைசி அதிகாரத்தில் "ஆவியும் மனவாட்டியும் வா என்கிறார்கள்" என்று சொல்லப்படுள்ளது. இதுவே பைபிளின் தொடக்கம் முதல் முடிவு வரை பரிசுத்த ஆவியானவரே நீக்கமர நிறைந்திருக்கிறார் எனபதைத் தெளிவாக்கும்.எனவே பைபிளின் ஆசிரியர் பரிசுத்த ஆவியானவரே எனபது தெள்ளத் தெளிவாகிறது। சரி அது என்ன பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, எபிரேயர்கள்? அடுத்த பதிவில் பார்க்கலாமா?

பைபிள் ஓர் அறிமுகம்

இந்த உலகில் எந்த ஒரு புத்தகத்தையும் முக்கியமானதாக சொல்ல அந்த புத்தகம் தான் எனக்கு பைபிள் என சொல்லக் கேட்டிருகிறீர்களா?. அப்படியானால் அவ்வளவு முக்கியமான புத்தகமா பைபிள் என்ற கேள்வி எழுகிறதா? ஆம் அது ஒரு முக்கியமான புத்தகம் தான். காரணம் அது ஓர் கடவுளின் வார்த்தைகளை அடக்கிய புத்தகம் அதனால் தான், இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா? இதற்கு நீங்கள் பைபிள் யாரால் எப்போது எழுதப்பட்டது என்ற கட்டுரையைப் படித்தால் உங்களுக்கு பதில் கிடைக்கும்.

சரி விசயத்திற்கு வருவோம் பைபிள் என்றால் என்ன பொருள் இதற்கு ஏதோ ஒரு பெரிய விளக்கம் இருப்பதாக பயந்துவிடாதீர்கள். பைபிள் என்றால் புத்தகம் என்று பொருள் அவ்வளவுதான். இதில் சுமார் 66(அறுபத்தாறு) புத்தகங்கள் உள்ளன. இதில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன அவை கிறிஸ்துவுக்கு முன் உள்ள செய்திகளை சொல்லுவது பழைய ஏற்பாடு என வழங்கப்படுகிறது இதில் 39 (முப்பத்து ஒன்பது புத்தகங்கள் உள்ளன கிறிஸ்துவுக்குப் பின் எழுதப்பட்ட புத்தகங்கள் புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றன, இதில்27(இருபத்தேழு) புத்தகங்கள் உள்ளன.

பைபிளில் அப்படி என்ன எழுதியிருக்கிறது என்று தெரியுமா? அவைகள் உலகம் உண்டான விதம் பற்றியும், சாத்தான் பற்றியும், சாத்தானால் செய்யப்படும் பாவம் பற்றியும், அதனால் மக்களின் அழிவு பற்றியும், இந்த அழிவிலிருந்து மக்கள் மீண்டு எப்படி நித்தியமாய் வாழ முடியும் என்பது பற்றியும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது இதை எப்படி நம்புவது? இன்று நீங்கள் கேட்பது புரிகிறது. அடுத்தடுத்து வரும் அத்யாயங்களில் விரிவாக விளக்குகிறேன் தொடர்ந்து படியுங்கள்.