புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?



அன்பானவர்களே இது வரை பைபிளில் பழைய ஏற்பாடு பற்றி விரிவாகப்பார்த்தோம், இதில் பழைய ஏற்பாட்டின் தொன்மை குறித்தும், அது எப்படித் தொகுக்கப்பட்டது என்பது குறித்தும் பார்த்தோம் இப்போது, புதிய ஏற்பாட்டு ஆகமங்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததா? இடையில் ஏதாவது திருத்தங்கள் செய்யப்பட்டதா? அதில் சொல்லப்பட்ட செய்திகள் உண்மையானவைகளா? அல்லது இடைச்செருகல் ஏதாவது இருக்கிறதா? என்பது பற்றி அறிவியல் ரீதியாக ஆராய்ந்து நம் சந்தேகங்களைத்தீர்த்துக் கொள்வோம்.

புதிய ஏற்பாட்டு நூல்கள் கிபி 40 முதல், கிபி 100 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவைகள் ஆகும், சிலர் இது வெகு காலத்திற்கு முன் எழுதப்பட்டது, மேலும் கிறிஸ்தவம் செல்வாக்கு மிக்கதாக இருந்த காலத்தில் ஏதாவது மாற்றி எழுதப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்புகின்றனர், இதற்கு உலகில் தற்போதும் நடைமுறையில் இருக்கும் பழங்கால நூல்களின் ஸ்திரத்தன்மையை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் "மூலப்பிரதிகள் விமர்சன அறிவியல்" மூலமாக ஆராய்ந்தவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது பற்றி தெளிவாகக் காண்போம்,

மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் வேதாகம விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள், Are the New Testament Documents Reliable? என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,

" மூலப்பிரதிகள் விமர்சன அறிவியல் மூலமாக புதிய ஏற்பாட்டை எழுதிய ஆசிரியர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை நமக்கு எவ்வளவு அதிகமாக மூலப்பிரதிகள் கிடைக்கின்றனவோ அதன் அடிப்படையில் நாம் புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மையை மிக மிகத் தெளிவாக அறிய முடியும், எப்படி எனில் மற்ற பிற வரலாற்று தொன்மையான நூல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது புதிய ஏற்பாட்டு அச்சுப்பிரதிகள் எத்தனை அதிகம் என்று பட்டியலிட்டுக் காட்டுகிறார், இதோ அந்தப்பட்டியல்...

வரலாற்று நூல்:
எப்போது எழுதப்பட்டது:
நமக்கு கிடைத்த முதல்
பிரதி எழுதிய வருடம்:
கால இடைவெளி
பிரதிகளின் எண்ணிக்கை:
ஹெரோடேடஸ்
கி.மு488-428
கி.பி900
1300
8
துஸிடிடீஸ்
கி.மு, 460 - 400
கி.பி 900
1300
8
டாஸிடஸ்
கி.பி 100
1100
1000
20
சீசரின் காலிக்போர்
கி,மு, 58 - 50
கி.பி 900
950
9-10
லிவியின் ரோம வரலாறு
கி.மு. 59 - கி,பி 17
கி.பி 900
900
20
புதிய ஏற்பாடு
கி.பி 40 - 100
கி.பி 130 (முழு அச்சுப் பிரதிகள் கி.பி 350)
300
கிரேக்கு 5000+
லத்தீன் 10,000
பிற 9300

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நூல்கள் அனைத்தும் உலக வரலாற்றில் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது, இதில் சீசரின் காலிக் போர் என்ற நூல் சீசரின் காலத்திற்கு பிறகு சுமார் 900 ஆண்டுகள் கழித்தே எழுதப்பட்டிருக்கிறது எனபதை புரூஸ் சுட்டிக்காட்டுகிறார். லிவியின் ரோம வரலாறு நமக்கு 20 பிரதிக்கும் மேல் கிடைக்கவில்லை. அதன் முதல் பிரதி கி.பி.900 ஆண்டைச் சேர்ந்தது. டாஸிடஸ் எழுதிய 14 வரலாற்று நூல்களில் வெறும் 20 பிரதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன அவர் எழுதிய நடபடிகள் என்ற பதினாறு நூல்கள் வெறும் இரண்டு அச்சுப்பிரதிகள் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவை. அதில் ஒரு அச்சுப்பிரதி 9ம் நூற்றாண்டையும் மற்றொன்று 11‍ம் நூற்றாண்டையும் சார்ந்தவை. தூஸிடிடீச் படைப்புகள் கி.பி. 900 ஆண்டைச் சேர்ந்த எட்டு பிரதிகளை மட்டுமே முழுக்க முழுக்க ஆதாரமாகக் கொண்டவை, ஹெரோடேடஸ் வரலாற்றின் நிலையும் இதுவே ஆகும், இவைகள் பெரும் கால இடைவளி கொண்டவை என்ற போதும் வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போதைய வரலாறு இதன் அடிப்படையிலேயே சொல்லப்படுகிறது.


ஆனால் புதிய ஏற்பட்டு நூல்களைப் பொருத்தமட்டில் நமக்கு ஏராளமான மூல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. புதிய ஏற்பாடு கி.பி.40‍ 100க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்படிருக்கக் கூடும். கி.பி.350 என்று தேதியிடப்பட்ட முழுமையான‌ புதிய ஏற்பாட்டு அச்சுப்பிரதிகள் கூட நமக்கு கிடைத்திருக்கின்றன.(கால இடைவெளி வெறும் 300 ஆண்டுகள் மட்டுமே)கி.பி 130 என்ற தேதியில் யோவான் எழுதிய சுவிசேசம் ஒரு பகுதி பிரதியும், 5000க்கும் மேற்பட்ட கிரேக்கு அச்சுப்பிரதிகள்,10,000 க்கும் மேற்பட்ட இலத்தீன் அச்சுப் பிரதிகள், 9,300 க்கும் மேற்பட்ட பிற அச்சுப்பிரதிகள், இன்னும் ஆதித் திருச்சபை பிதாக்களின் எழுத்துக்களில் 36,000க்கும் மேற்பட்ட மேற்கோள்கள் உள்ளன.

மூலப்பிரதிகள் விமர்சனத்தில் முக்காலத்திலும் சிறந்தவர் என்று போற்றப்படும் F.J.A. ஹோர்ட் கூறினார்: " புதிய ஏற்பாட்டின் மூலப் பிரதியானது தன‌க்கு ஆதாரமாக அமைந்துள்ள வகைவகையான முழுமையான சான்றுகளில், பண்டைய வசன நடை எழுத்துக்களிலேயே முழுக்க முழுக்க உன்னதமானதாகவும், வேறு எதுவும் தன் அருகில் நெருங்கக் கூட முடியாத அளவிற்கு மிகுந்த மேன்மை வாய்ந்ததாகவும் உள்ளது"

இந்த துறையில் தலைசிறந்து விளங்கும் சர் ஃபிடரிக் கென்யான் என்பவரை மேற்கோள் காட்டி F.F. புரூஸ் சான்றுகளைத் தொகுத்துத் தருகிறார்:

முதன் முதலாக பிரதி இயற்றப்பட்ட தேதிக்கும் முதன் முதலாக நமக்கு கிடைத்துள்ள பிரதியில் காணப்படும் தேதிக்கும் இடையேயுள்ள கால இடவெளி அவ்வளவு முக்கியமல்ல என்று கருதப்படக் கூடிய அளவிற்கு மிகச் சிறிதாகும். வேத வாக்கியங்கள் காலங்கள் கடந்த பின்னரும் அவை முதலில் எழுதப்பட்ட வண்ணமாகவே நம் கையில் கிடத்திருக்கின்றன என்பதில் சந்தேகத்தை கிளப்பக்கூடிய ஆதாரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டாயிற்று, புதிய ஏற்பாட்டு நூல்களின் உண்மை (அசல் தன்மை) மற்றும் பொதுவான நேர்மை ஆகியவை நிரூபிக்கப்பட்டு நிறுவப்பட்டாயிற்று என்று கொள்ளலாம்.

அன்பானவர்களே புதிய ஏற்பாட்டின் அசல் தன்மை குறித்து அறிஞர்கள் சொன்னதை தெளிவாக அறிந்திருப்பீர்கள் என்று விசிவாசிக்கிறேன், இனி அடுத்து வரும் பதிவுகளில் தமிழ் மொழியில் பைபிள் மொழிபயர்க்கப்பட்ட விருவிருப்பான வரலாற்ரினைக் காண்போம் காத்திருங்கள்......

Comments