Skip to main content

Posts

அன்பால் இருநாட்டையும் இணைத்த சமந்தா !!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டி சிறப்பு பகிர்வு கடவுள் இன்னும் மனித இனத்தின் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்பதைத் தான், மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தையும் நினைவுபடுத்துகிறது என்பது மகாகவி தாகூரின் வரிகள். அப்படி அமைதியின் சின்னமாக… பதினொரு வயதிலே உருவெடுத்த சமந்தா ஸ்மித் எனும் சுட்டியின் கதை உங்களுக்காக இதோ…
1972-ல் அமெரிக்காவின் மெய்ன் நகரத்தில் பிறந்து, தன்னுடைய ஐந்து வயதிலே இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்குக் கடிதம் எழுதிய சமத்துப் பொண்ணுதான் இந்த சமந்தா. அப்பொழுது, அமெரிக்காவும் ரஷ்யாவும் பகைமை கொண்டு, டிஷ்யூம் டிஷ்யூம் பண்ணிக் கொண்டு இருந்தன. சமந்தா பதினொரு வயது சிறுமியாய் இருக்கும் போது, யூரி அன்ட்ரபோவ் சோவியத் ரஷ்யாவின் தலைவராக இருந்தார். ரொம்பவும் ஸ்ட்ரிக்ட், இரு நாட்டுக்கும் இவராலே சண்டை வந்துவிடும் என்று அமெரிக்க பத்திரிகைகள் அவரை வில்லனா சுட்டிக் காட்டின. இப்படி ஒரு கட்டுரையைப் படித்த சமந்தா, தன் அம்மாவிடம்… ”அம்மா… சண்டை போடறதுதான் அவரோட வேலைனா அதைத் தப்புன்னு அவருக்குப் புரியவைக்கணும். யார் அவருக்கு இதைச் சொல்றது?” எனக் கேட்டாள். ”நீயே க…
Recent posts

இயேசு சிலுவையில் மரித்ததற்கான வரலாற்று ஆதாரங்கள்

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்க வில்லையென்றும் வேதாகமத்தில் புதிய ஏற்பாடு பகுதி அவரது சீடர்களால் எழுதப்பட்டதனால், அதை அவர்கள் மறைத்திருக்க கூடும்மென்றும் சிலர் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவர்.

அவர்களின் குற்றச்சாட்டின்படி தனியே சீடர்களால் மட்டுமின்றி இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பல சரித்திர ஆசிரியர்களும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கின்றபடியா
லும்; இக் குற்றச்சாட்டுக்கள் பொய் என்று தெட்டத்தெளிவாக
தெரிகின்றது.

இயேசு சிலுவையில் மரித்ததற்கான வரலாற்று ஆதாரங்கள்;

FLAVIUS JOSEPHUS

(உலகப்புகழ் பெற்று யூத சரித்திர ஆசிரியர்) கிறிஸ்துவின் மரணத்திற்கு சில ஆண்டுகளுக்குப்பின்பு கி.பி 66 ஆம் ஆண்டளவில் கலிலேயாவிலுள்ள யூத இராணுவஅதிகாரியாக இருந்தவர். அவர் தன்னுடைய புஸ்தகம் Antiquitnes இல் கிறிஸ்துவைப்பற்றியும் அவர் சிலுவையில் அறையப்பட்டதைக்குறித்தும் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

இப்பொழுது இயேசுவின் காலம் வந்துவிட்டது, ஒரு ஞானி, சட்டத்தின்படி கூறுவதென்றால் ஒரு மனிதர், அநேக அற்புதங்களை செய்தவர். அவர் அநேகருக்கு போதித்தார், அவருடைய சத்தியமான போதனைகளை சந்தோஷத்துடனும்…

இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். மேதாவிகளின் கவனத்திற்கு...

இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். மேதாவிகளின் கவனத்திற்கு...
நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தாதீர்கள்.ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென்ஜமின் பிராங்கலின் என்னும் கிறித்தவர்நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில் இதை கண்டுபிடித்தவர் ஹென்றி போர்டு என்ற கிறித்தவர்.நீங்கள் கேமிராவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் தாமஸ்பெல்ஸ் உட் என்ற கிறித்தவர்.நீங்கள் திரைப்படங்களை பார்க்கா தீர்க ஏன் பார்க்கக் கூடாது என்ற சந்தேகம் தோன்றினால் இதை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர். அதனால் திரைப்படம் பார்க்காதீர்கள். நீங்கள் கிராம போனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர். நீங்கள் வானொலியை கேட்காதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் மார்கோனி என்ற கிறித்தவர்.நீங்கள் கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக்கடிகாரத்தைக் கணடு பிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிறித்தவர்.நீங்கள் அச்சுப் பொறியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன் பார்க்கேக்ஸடன் என்ற கிறித்தவர். பவுண்டன் பேனாவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் …

மரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா ?

முன்னோட்டமாக:

கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவு படத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். இதை உதாரணமாகக் காட்டி: பாருங்கள் அங்கே அவர்களுக்கு தேவையான திராட்சரசத்தை மரியாள்தான் இயேசுவிடமிருந்து வாங்கிக்கொடுத்தாள். எனவே நம்முடைய தேவைக்கு தாயிடம் கேட்டாள், மறுக்காமல் கிடைக்கும் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் சொல்கின்றார்கள். இதுதவறானபுரிந்துகொள்ளுதல்.
நான் கொடுக்கும் 10 காரணங்களை படியுங்கள்:

[1] யோவான் 14:6 இயேசு சொன்னார்: "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". என்னாலேயல்லாமல் ஒருவனும் வேறு வழியாகபரலோகம் செல்லமுடியாது. நான் தான் வழி. மரியாள் அல்ல.

[2] கானாவூர் கலியாணத்தில் ( யோவான் 2:4 ) இயேசு சொன்னார், "ஸ்திரீயே (Woman), உனக்கும் எனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லையே"…

எபேசு

எபேசு என்ற வார்த்தைக்கு விரும்பப்பட்ட/பிரியமான என்று பொருள். ரோம ஆட்சியின் போது மிகப்பெரிய துறைமுகப் பட்டணமாக இப்பட்டணம் விளங்கியது.

இப்பட்டணத்திலிருந்து புறப்படும் மூன்று மாபெரும் சாலைகள் உலகின் கிழக்கு(பாபிலோன்), வடக்கு, தெற்கு ஆகிய திசைகளை இணைத்தன. எபேசு அக்காலங்களில் வாணிபத்தில் கோலோச்சி விளங்கியது.

ஆசியாவின் மாயச் சந்தை என்றும் எபேசு அழைக்கப்பட்டது.

1) தியானாள் கோவில்:
-------------------------------------
எபேசுவில் இருந்த தியானாள் எனப்படும் காமதேவதையின் ஆலயம் உலகப் புகழ் பெற்றது. (அப்போ 19:24) இக்கோவில் முதலாம் நூற்றாண்டின் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது.

லத்தீன் மொழியில் தியானாள்(டயனா) என அழைக்கபடும் இது, கிரேக்க மொழியின் அர்த்தெமி என்று அழைக்கப்படுகிறது.

அர்த்தெமி என்பது கிரேக்கர்களின் அழகிய வனதேவதை. எபெசுவின் தியானாள் அர்த்தேமியை போல அழகான தேவதை அல்ல, இது வெறும் கருப்பு உருவம் கொண்ட ஒரு கல் அவ்வளவே.

தங்கள் தேவதை வானத்திலிருந்து விழுந்தது என அவர்கள் உரிமைப் பாராட்டினார்கள். (அப்போ 19:35) உண்மையில் அது பெண் உருவு போன்ற ஓர் எரிக் கல்லாக இருக்க வேண்டும…

கதையல்ல நிஜம்

****** கதையல்ல நிஜம் (3) ******

*** மோகன் சி. லாசரஸ் ***


"இயேசு கிறிஸ்து தெய்வமே அல்ல, காந்தி, நேரு போல வரும் ஒரு மனிதர்தான். அவர் வந்தார், சில நல்ல காரியங்களை செய்தார், மரித்து விட்டார்" என்று வாக்குவாதம் பண்ணி கொண்டிருந்தான் அந்த சிறுவன். தெய்வபக்தியும், மத வைராக்கியமும் அவனுள் மிகுந்திருந்தன. பேச்சிலும், தோற்றத்திலும் அவை வெளிப்பட்டன. சென்னையின் நகர சூழலிலும் சந்தனப் பொட்டுடன் பக்திமயமாய் அவன் வகுப்பிற்கு வரும்போது அவனை "சந்தப் பொட்டு" என்றே அழைத்து வந்தனர்.

அவனுடைய குடும்பம் சில வருடங்களுக்கு முன்புதான் சென்னையில் குடியேறி இருந்தது வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை ஸ்கூலில் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொது திடீரென அவனது இருதயம் மோசமாய் பாதிக்கப்பட்டது. வலது கால் முற்றிலுமாய் செயலற்று போனது. அப்பொழுது அவனுக்கு வயது 14.

மருத்துவர்கள் பலரிடம் பெற்றோர் காண்பிக்க, எவராலுமே என்ன வியாதி என்றே தீர்மானிக்க முடியாமல் போனது . எலும்பும் தோலும் ஆனான் அந்த சிறுவன். வெளியில் தெரியும் அளவிற்கு இதயம் வீங்கிவிட வலது கால் முற்றிலும் செயலற்று போனது. ஒரு கட்…

5 ஆம் வகுப்பு மாணவிகள் பாலியல் பலாத்காரம்:3 முதியவர்கள் கைது !

தூத்துக்குடியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரண்டு மாணவிகளின் கைகளில் பத்து, இருபது என ரூபாய் நோட்டுக்கள் புழங்கியுள்ளது. குழந்தைகளின் கையில் ரூபாய் நோட்டுக்களை பார்த்த பெற்றோர்கள், இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தார்கள்? என்று விசாரித்துள்ளனர். அதற்கு, ‘‘அடுத்த தெருவில் உள்ள சிமெண்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தாதான் தினமும் காசு தருவார். முதலில் நான் மட்டும் போனேன் பிறகு உன் பிரண்டையும் கூட்டிட்டு வா..ன்னு அந்த தாத்தா சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் அனுஷ்யாவையும் கூட்டிட்டி போனேன்’’ என்று வெகுளியாக பதில் கூறி இருக்கிறாள் ஆனந்தி. குழந்தைகள் சொல்வது புரியாமல் குழம்பிய பெற்றோர்கள் மேலும் அதட்டிக் கேட்டுள்ளனர். அதில், 60 வயதுக்கும் மேற்பட்ட 3 முதியவர்கள் 2 குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளது தெரிய வந்திரு…