புழக்கத்தில் இருக்கும் தமிழ் பைபிள் யாரால் எப்போது மொழிபெயர்க்கப்பட்டது?


அன்பானவர்களே இதுவரை பைபிளை யார் எழுதினார்கள் அது காலத்திற்கேற்ப திருருத்தப்பட்டதா? ஏன் கத்தோலிக்கர்கள் பயன்படுத்தும் பைபிளில் கூடுதல் புத்தகங்கள் இருக்கின்றன? தமிழ் மொழி வளர்ச்சியில் பைபிளின் பங்கு ஆகியவற்றை தெளிவாக அறிந்தோம். சமீபத்தில் ஒரு புத்தகத்தைப் படித்தேன். தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பைபிள் கிரேக்கு எபிரேயு மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்படவில்லை என பொய்யான வாதத்தை முன் வைத்திருந்ததைக் கன்டு வேதனை அடைந்தேன், இந்த பதிவு இந்த உண்மையைத் தெளிவாக்கும் என்று கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறேன்,

ஹென்றி பவர் 1813 - 1888

பழைய மொழியாக்கங்கள் சரிவர புரியாமல் இருந்ததால் மொழியாக்கப் பணியை அருட்செய்தி அமைப்பினர் பவர் என்பவரின் பொறுப்பில் ஒப்படைத்தனர்.

அவர் யார்?


ஹென்றி பவர் வாழ்க்கை சுருக்கம்

இவர் 1813ம் ஆண்டு ஜனவரி 13இல் இந்தியாவில் பிறந்தார். இவரது தந்தை பிரஞ்சு போர் வீரரான பிரான்யோயிஸ் பூவியர். இவர் இந்தியாவில் ந‌டந்த போரில் கைதியாக்கப்பட்டு இந்தியாவில் தங்கினார், பின்னர் ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சிந்தாதிரிப்பேட்டை சியோன் ஆலய வளாகத்தில் இவர்களது வீடு இருந்தது, பவர் அவர்கள் இங்குதான் பிறந்தார். இவரது தாயைப்பற்றிய வேறு விபரங்கள் தெரியவில்லை, பவர் அவர்கள் இங்கிலாந்தில் கல்வி கற்றவர்1837ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். திருப்பாச்சூரில் போதகராகப் பணியமர்த்தப்பட்டார்.

பின்னர் சென்னை புரசைவாக்கம் வந்தார்.1858ல் தமிழ் பைபிளை திருத்தி மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டார். 1864ம் ஆண்டு சென்னை சூளை தூய பவுல் ஆலய போதகராக நியமிக்கப்பட்டார், நியமிக்கப்பட்ட ஆண்டு (1864) இவர் அடிக்கடி திருச்சி, திருநெல்வேலி மீண்டும் சென்னை சாந்தோம் போன்ற இடங்களுக்கு மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தார். இதனால் மனமடிவாகி உடல் நலம் குன்றி 1888ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருக்குற்றாலத்தில் உயிரிழந்தார்.

இவர் அறிந்திதிருந்த மொழிகள்: 
கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிரதம், ஆங்கிலம், தமிழ், கன்னடம், ஹிந்தி, ஆகியவைகள் ஆகும், இவர் மூல மொழியிலிருந்தே பைபிளை மொழியாக்கம் செய்தார்.

இவர் வெளியிட்ட வேறு நூல்கள்:
நன்னூல், பகவத் கீதை, ஆகியவற்றை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தார். வேத அகராதியை வெளியிட்டார். ( தமிழ் ஆங்கிலம் அகராதியை முதன் முதலில் வெளியிட்டவர் நாம் முன் பதிவில் கண்ட மொழிபெயர்ப்பாளர் பெப்ரிஷீயஸ் அவர்கள் ஆவார்) இன்னும் சில நூல்களயும் வெளியிட்டார்.

ஐக்கிய திருப்புதல்
பவர் அவர்கள் வெளியிட்ட பைபிளுக்கு ஐக்கிய திருப்புதல் என்று பெயர் உண்டு காரணம் இவரது மொழிபெயர்ப்புக் குழுவில் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த அனேகர் இருந்தனர்.

1871ல் பவர் திருப்புதல் முழு வேதாகமாக வெளியிடப்பட்டது

பிழைகள்
ஒரு மொழி 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழைய சொற்கள் மறைந்து புதிய சொற்கள் புழக்கத்தில் வரும் அந்த வகையில் கிட்டத் தட்ட 140 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த மொழியாக்கத்தில் அனேக வழக்கொழிந்த சொற்களும், அந்தக் கால‌த்தில் புழக்கத்தில் இருந்த இப்போது தமிழர்கள் மறந்துவிட்ட ஏராளமான வடமொழி சொற்களும் இருக்கின்றன. மேலும் சொற்பிழைகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது

உதாரணம்
குதிகாலை நசுக்குவாய் (கடிப்பாய்) ஆதி:3;15, மேற்கொள்ளுதல் (சங்:12;4) மேற்கொள்ளுதல் என்ற சொல் பொறுப்பேற்றல் என்ற பதத்தில் ஆளப்பட்டுள்ளது. இலக்கணப்பிழைகள்: பன்றிகள் மேய்ந்து கொன்டிருந்தது (கொன்டிருந்தன) வட சொற்கள்: ஜனங்கள், புருஷன், ஸ்த்ரீ, சந்தோஷம், போன்றவை.

பவர் திருப்புதல் 1915 ஆம் ஆண்டு புதிய திருத்தங்களுடன் வெளிவந்த போது அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது, திருத்தப்பட்ட பவர் பைபிள் வெளி நாட்டில் அச்சிடப்பட்டு அதன் பிரதிகள் கப்பலில் வந்துவிட்டன. ஆனால் அன்றைய தமிழ் கிறிஸ்தவர்கள் கடலில் தூக்கி எறிந்துவிட்டனர். ஏனெனில் அக்காலத்தில் மக்கள் விரும்பிப் படித்தது பெப்ரீஷியஸ் மொழியாக்கத்தைதான்.

Comments