Monday, September 23, 2013

எபேசு
எபேசு என்ற வார்த்தைக்கு விரும்பப்பட்ட/பிரியமான என்று பொருள். ரோம ஆட்சியின் போது மிகப்பெரிய துறைமுகப் பட்டணமாக இப்பட்டணம் விளங்கியது.

இப்பட்டணத்திலிருந்து புறப்படும் மூன்று மாபெரும் சாலைகள் உலகின் கிழக்கு(பாபிலோன்), வடக்கு, தெற்கு ஆகிய திசைகளை இணைத்தன. எபேசு அக்காலங்களில் வாணிபத்தில் கோலோச்சி விளங்கியது.

ஆசியாவின் மாயச் சந்தை என்றும் எபேசு அழைக்கப்பட்டது.

1) தியானாள் கோவில்:
-------------------------------------
எபேசுவில் இருந்த தியானாள் எனப்படும் காமதேவதையின் ஆலயம் உலகப் புகழ் பெற்றது. (அப்போ 19:24) இக்கோவில் முதலாம் நூற்றாண்டின் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது.

லத்தீன் மொழியில் தியானாள்(டயனா) என அழைக்கபடும் இது, கிரேக்க மொழியின் அர்த்தெமி என்று அழைக்கப்படுகிறது.

அர்த்தெமி என்பது கிரேக்கர்களின் அழகிய வனதேவதை. எபெசுவின் தியானாள் அர்த்தேமியை போல அழகான தேவதை அல்ல, இது வெறும் கருப்பு உருவம் கொண்ட ஒரு கல் அவ்வளவே.

தங்கள் தேவதை வானத்திலிருந்து விழுந்தது என அவர்கள் உரிமைப் பாராட்டினார்கள். (அப்போ 19:35) உண்மையில் அது பெண் உருவு போன்ற ஓர் எரிக் கல்லாக இருக்க வேண்டும் என்பது பலர் கருத்து.

இந்த தேவதையின் சொரூபங்களும் தாயத்துகளும் உலக மேன்மையை தருவதாக கருதப்பட்டது. எபேசிய எழுத்துக்கள் எனப்படும் தாயத்துக்கள் பெருமளவில் விற்கப்பட்டன. இக்கோவிலில் தேவதாசி முறையும் வழக்கத்தில் இருந்தது. ஒழுக்ககேடுகளும், மூடநம்பிக்கைகளும் அங்கு கோலோச்சி இருந்தன.

உலகத்திற்கு நீங்கள் வெளிச்சமாய் இருக்கிறீர்கள் என்று வாக்குரைத்த இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய பவுலடியார், இப்பட்டணத்தின் இருள் நீக்கும் வெளிச்சமாய் கிபி 55 ஆம் ஆண்டு சுடர் விடத் துவங்கினார். பவுலடியாரின் ஊழியம் இக்கோவிலுக்கும் அதை சார்ந்த மாய சந்தைக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்திருக்கிறது. (அப்போ 19:27).

2) எபெசுவின் நூலகம் :
--------------------------------------
எபெசுவில் மிகப்பெரிய நூலகம் ஒன்று இருந்தது. இதில் மாய தந்திரங்களை குறித்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் காணப்பட்டன. (அப்போ 19:19) இங்கு ஏறத்தாழ 15,000 க்கும் மேற்பட்ட புஸ்தக சுருள்கள் இருந்தன.

‘ஆசியாவின் ஆளுநராகிய செல்சஸ் என்பரின் கட்டுப்பாட்டுக்குள் இந்நூலகம் இருந்தது. பின்னாளில் செல்சஸின் கல்லறை இந்நூலகத்தில் அடியில் வைக்கப்பட்டது.

சுவிசேஷத்தின் ஒளி எபேசுவில் பிரகாசித்த போது, “மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்” என்று அறிகிறோம் (அப்போ 19:19)

3) வியாபார சந்தை:
-------------------------------
எபெசுவில் 360 அடியில் சதுர வடிவிலான பிரசித்தி பெற்ற வியாபார சந்தை ஒன்று இருந்தது. இங்கு தான் ஆக்கிலாள், ப்ரிஸ்கிலாள் ஆகியோரோடு இணைந்து பவுலடியார் கூடாரம் பண்ணுகிற தொழிலை செய்திருக்க வேண்டும். இச்சந்தைக்கு வருவோர் போவோரிடம் பவுலடியார் சுவிசேஷத்தை அவசியம் பிரசங்கித்திருப்பார்.


4) அரங்கசாலை:
--------------------------
25,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கசாலை ஒன்று எபெசுவின் மையத்தில் இருந்தது. ரோமர்களால் இது பராமரிக்கப்பட்டு வந்தது.

மல்யுத்தங்களும், கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்பட்டது. பவுலடியாரின் ஊழியம் தியானாளின் கோவிலுக்கும், மதம் சார்ந்த வாணிபத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போது, கலகக்காரர்கள் இந்த அரங்க சாலையில் தான் கூடி வந்தார்கள். (அப்போ 19:29)

இந்த அரங்க சாலையில் “எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்” (அப்போ 19:29)

5) எபேசுவில் திருப்பணி:
---------------------------------------
விக்கிரக ஆராதனையும், பாவமும் நிறைந்த இந்தப் புறஜாதி பட்டணத்தில் கிபி 55ல் அப்போஸ்தலனாகிய பவுல் முதல் சபையை ஸ்தாபித்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அவர் அங்கே ஊழியம் செய்ததை அப்போஸ்தலருடைய நடபடிகள் 18,19 அதிகாரங்கள் அறிவிக்கின்றன.

யோவான், தீமத்தேயு முதலான பரிசுத்தவான்கள் சபையின் கண்காணிகளாக செயல்பட்டு வந்தார்கள். யோவானுடைய கல்லறை இந்தப் பட்டணத்தில் இன்றும் இருக்கிறது.

எபேசு பட்டணத்தில் உள்ள சபைக்கு பவுலடியார் எழுதிய நிரூபம் வேதபுத்தகத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

வெளிப்படுத்தின விசேஷத்தில் யோவானுக்கு தன்னை வெளிப்படுத்திய இயேசு கிறிஸ்து ஏழு சபைகளுக்கு நிரூபங்களைத் தருகிறார். அதில் எபேசு முதல் இடம்பிடித்துள்ளது.

பாவ இருளிலும், மூட நம்பிக்கைகளிலும் உழன்று கொண்டிருந்த எபேசு பட்டணத்தில் சுவிசேஷத்தின் ஒளி பிரகாசித்த போது பரிசுத்தர் கூட்டம் நடுவில் வாசம் செய்யும் வரும் கிறிஸ்து எபேசு சபையில் உலாவி வருவது தேவனுடைய கிருபையின் வெளிப்பாடு. (வெளி 2:1)


Thanks to கதம்பம

Wednesday, September 18, 2013

கதையல்ல நிஜம்

****** கதையல்ல நிஜம் (3) ******

*** மோகன் சி. லாசரஸ் ***"இயேசு கிறிஸ்து தெய்வமே அல்ல, காந்தி, நேரு போல வரும் ஒரு மனிதர்தான். அவர் வந்தார், சில நல்ல காரியங்களை செய்தார், மரித்து விட்டார்" என்று வாக்குவாதம் பண்ணி கொண்டிருந்தான் அந்த சிறுவன். தெய்வபக்தியும், மத வைராக்கியமும் அவனுள் மிகுந்திருந்தன. பேச்சிலும், தோற்றத்திலும் அவை வெளிப்பட்டன. சென்னையின் நகர சூழலிலும் சந்தனப் பொட்டுடன் பக்திமயமாய் அவன் வகுப்பிற்கு வரும்போது அவனை "சந்தப் பொட்டு" என்றே அழைத்து வந்தனர்.

அவனுடைய குடும்பம் சில வருடங்களுக்கு முன்புதான் சென்னையில் குடியேறி இருந்தது வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை ஸ்கூலில் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொது திடீரென அவனது இருதயம் மோசமாய் பாதிக்கப்பட்டது. வலது கால் முற்றிலுமாய் செயலற்று போனது. அப்பொழுது அவனுக்கு வயது 14.

மருத்துவர்கள் பலரிடம் பெற்றோர் காண்பிக்க, எவராலுமே என்ன வியாதி என்றே தீர்மானிக்க முடியாமல் போனது . எலும்பும் தோலும் ஆனான் அந்த சிறுவன். வெளியில் தெரியும் அளவிற்கு இதயம் வீங்கிவிட வலது கால் முற்றிலும் செயலற்று போனது. ஒரு கட்டத்தில் இனி மருத்துவத்தால் உங்கள் மகனை குணமாக்க முடியாது என்று மருத்துவர்கள் அனுப்பிவிட, பெற்றோர்கள் பல தெய்வங்களை நோக்கி வேண்டி பார்த்தார்கள். மரண படுகையிலிருந்த அவனுடைய வாழ்வுக்கு தெய்வங்கள் என சொல்லப்படும் எவரும் பதில் கொடுக்கவில்லை. அதனால் வருத்தத்தின் ஆழத்தில் அவனது தாய் மூழ்கி இருக்க, அவனது நிலையோ பரிதபிக்க வைத்தது. சாகப்போகிறவனை கடைசியாய் பார்ப்பது போல் பார்த்து சென்றனர் அவனது உறவினர்கள்.

அடுத்தவர்கள் உதவியுடனேயே தனது தினசரி வாழ்வை கழித்து வந்த அச்சிறுவனை பார்க்க வந்தார் ஒரு கிறிஸ்தவ சகோதரர் "என் மகனை கைவிட்டுவிட்டார்கள், என் மகனுக்காக இயேசுவினிடத்தில் ஜெபம் செய்வீர்களா?" என்று அவரிடம் கண்ணீரோடு கேட்டார்கள் அவனது தாய்.

அவர் ஜெபம் செய்ய ஆரம்பித்தார். அவன் கேலி செய்த, மிகவும் வெறுத்த இயேசுவிடம் அந்த சகோதரர் ஜெபம் பண்ணுவதை அந்த சிறுவன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். ஆனால் திடீரென்று அவனது உணர்வுகள் தெய்வீக வல்லமை ஒன்று அந்த அறைக்குள் இறங்குவதை உணர்ந்தது. படுகையின் அருகில் யாரோ வருவதையும், பின் , அவருடைய கரம் தன்னை தொட்டதையும் உணர முடிந்தது. மின்சாரத்தை போலிருந்த தேவ வல்லமை, செயலற்று கிடந்த அவனது வலது கால் வழியாக பாய்ந்து சென்றது. அவனுள் மெலிதாய் பயம் எழும்பிற்று . அவனை அறியாமல் கண்களில் கண்ணீர் வடிந்தது. அந்த சகோதரர் ஜெபித்து கொண்டிருக்க, அச்சிறுவன் எழுந்து உட்கார்ந்த பின் அவனது இருதயம் சரியாகி இருந்தது. தனக்கு சுகமளித்த இயேசு கிறிஸ்துதான் மெய்யான தெய்வம் என்று அவன் மனம் சொல்லிற்று. அவன் அதை நம்பி விசுவாசித்தான்.

இன்று அந்த சகோதரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் தான் பெற்ற அற்புதத்தை உலகமெங்கும் அறிவித்தும், நடப்பித்தும் வருகிறார். அற்புதங்கள் இன்றும் பலருக்கு தேவை. தேவனாலேயே அது சாத்தியம். தேவன் அதற்க்கு பயன்படுத்தும் பாத்திரமாய் விளங்குகிறவர் தான் சகோதரர். மோகன் சி. லாசரஸ்.

சந்தன பொட்டுவின் மணம் இன்று அவரிடம் இல்லை. இயேசு கிறிஸ்துவின் இனிய நற்காந்தம் மட்டுமே அவரிடம் எவரையும் வசீகரிப்பதாய் இருக்கிறது.


நண்பர்களே! நீங்களும் உங்களுடைய வாழ்கையை இயேசுவினிடம் ஒப்புகொடுத்தால் உங்கள் வாழ்கையையும் அவர் மாற்றி, உங்களை பல கோடி மனிதர்களுக்கு ஆசிர்வாதமாக எடுத்து பயன்படுத்துவார்.

"குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்" யோவான் 8:36

Article by : Wilson E. Paul

Monday, September 2, 2013

5 ஆம் வகுப்பு மாணவிகள் பாலியல் பலாத்காரம்:3 முதியவர்கள் கைது !


தூத்துக்குடியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரண்டு மாணவிகளின் கைகளில் பத்து, இருபது என ரூபாய் நோட்டுக்கள் புழங்கியுள்ளது. குழந்தைகளின் கையில் ரூபாய் நோட்டுக்களை பார்த்த பெற்றோர்கள், இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தார்கள்? என்று விசாரித்துள்ளனர்.
அதற்கு, ‘‘அடுத்த தெருவில் உள்ள சிமெண்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தாதான் தினமும் காசு தருவார். முதலில் நான் மட்டும் போனேன் பிறகு உன் பிரண்டையும் கூட்டிட்டு வா..ன்னு அந்த தாத்தா சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் அனுஷ்யாவையும் கூட்டிட்டி போனேன்’’ என்று வெகுளியாக பதில் கூறி இருக்கிறாள் ஆனந்தி.
குழந்தைகள் சொல்வது புரியாமல் குழம்பிய பெற்றோர்கள் மேலும் அதட்டிக் கேட்டுள்ளனர். அதில், 60 வயதுக்கும் மேற்பட்ட 3 முதியவர்கள் 2 குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ், வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை விசாரித்துள்ளனர். அதில், தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய், திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரிந்திருக்கிறது.
தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் 3 முதியவர்களையும் கைது செய்து, முதலாவது ஜூடிசியல் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு தூத்துக்குடி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா, 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்தவர்.
இந்த சம்பவம் அறிந்த ஜனநாயக மாதர் சங்கத்தினர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 thanks to
inruoruthagava