5 ஆம் வகுப்பு மாணவிகள் பாலியல் பலாத்காரம்:3 முதியவர்கள் கைது !


தூத்துக்குடியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரண்டு மாணவிகளின் கைகளில் பத்து, இருபது என ரூபாய் நோட்டுக்கள் புழங்கியுள்ளது. குழந்தைகளின் கையில் ரூபாய் நோட்டுக்களை பார்த்த பெற்றோர்கள், இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தார்கள்? என்று விசாரித்துள்ளனர்.
அதற்கு, ‘‘அடுத்த தெருவில் உள்ள சிமெண்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தாதான் தினமும் காசு தருவார். முதலில் நான் மட்டும் போனேன் பிறகு உன் பிரண்டையும் கூட்டிட்டு வா..ன்னு அந்த தாத்தா சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் அனுஷ்யாவையும் கூட்டிட்டி போனேன்’’ என்று வெகுளியாக பதில் கூறி இருக்கிறாள் ஆனந்தி.
குழந்தைகள் சொல்வது புரியாமல் குழம்பிய பெற்றோர்கள் மேலும் அதட்டிக் கேட்டுள்ளனர். அதில், 60 வயதுக்கும் மேற்பட்ட 3 முதியவர்கள் 2 குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ், வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை விசாரித்துள்ளனர். அதில், தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய், திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரிந்திருக்கிறது.
தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் 3 முதியவர்களையும் கைது செய்து, முதலாவது ஜூடிசியல் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு தூத்துக்குடி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா, 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்தவர்.
இந்த சம்பவம் அறிந்த ஜனநாயக மாதர் சங்கத்தினர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 thanks to
inruoruthagava

Comments