ஆங்கிலத்தில் பைபிள்

ஜான் விக்ளிஃப்
இன்று விதவிதமான ஆங்கில வேதாகமங்களைப் பார்க்கிறோம். இது பலரின் இரத்தத்தில் வந்த்துதான் இந்த மொழியாக்கம்.சீர்திருத்த்த்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுவபர் ஜான் விக்ளிஃப் இவர் மார்டின் லூத்தர் கிங் அவர்களுக்கு முந்தினவர், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியரான இவர் ஒவ்வொரு மனிதனும் தன் தாய் மொழியில் பைபிளை வாசிக்கவேண்டும் என வாஞ்சையுள்ளவர், அதோடு மட்டுமல்ல லத்தீன் மொழிபெயர்ப்பான வால்கேட்டிலிருந்து ஆங்கிலத்திற்கு பைபிளை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம் அச்சடிக்கும் முறை கிடையாது ஆகவே கையெழுத்துப்பிரதியாகவே வெளியிட முயன்றார், ஆனால் அதற்கு முன்னதாகவே மரித்துப் போனார்.
இதற்குப்பின்பு அவரது நன்பர்கள் ஒருசில திருத்தங்களுடன் அந்த மொழியாக்கத்தை வெளியிட்டனர் இதுவே ஆங்கிலத்தில் வந்த முதல் வேதாகமம் ஆனால் அச்சுவடிவில் வெளிவரவில்லை. இந்த வேதாகமங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவைகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தண்டனை
இந்த மொழிபெயர்ப்பை வெளியிட்டதற்காக ஜான் விக்ளிஃப் அவர்களுக்கு இறந்த பிறகு தண்டனை வழங்கப்பட்டது, என்ன வினோதமாக இருக்கிறதா? ஆம் இறந்து 17 ஆண்டுகளுக்கு அவரது கல்லறை தோண்டப்பட்டு பாராளுமன்ற உத்தரவுப்படி தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டது ஆனால் இது போன்ற அச்சுருத்தல்கள் மொழியாக்கப் பணிகளை சிறிதும் பாதிக்கவில்லை.
டிண்டேல் வேதாகமம் (1525) (இதுவே முதன்முதலில் அச்சுவடிவில் வெளிவந்த அச்சு வடிவ வேதாகமம்)
1525 ஆம் ஆண்டு புதிய ஏற்பாடும் அதைத்தொடர்ந்து 1536ஆம் ஆண்டு மற்ற சில புத்தகங்களும் வெளிவந்தன, ஆனால் இந்த மொழிபெயர்ப்புக்காக 1536 ஆம் ஆண்டு அக்டோபர் 6ல் எட்டாம் ஹென்றியின் ஆனைப்படி டிண்டேலை கம்பத்தில் கட்டிவைத்து உயிரோடு தீயிட்டுக்கொளுத்தினார்கள், “கர்த்தாவே இங்கிலாந்து மன்ன்னின் கண்களைத்திறந்தருளும் என்று வீர முழக்கமிட்டு அவர் தீக்கிரையானார்,
டிண்டேலின் நண்பர் கவெர்டேல் என்பவர் மற்ற புத்தகங்களையும் அச்சிட்டு மற்றொரு பதிப்பை வெளியிட்டார் இதுவே ஆங்கிலத்தில் வந்த முழு அச்சிடப்பட்ட பைபிள்.
இதில் குறிப்பிட்த்தக்க விசயம் என்னவென்றால், இவர்களது மொழிபயர்ப்பை இங்கிலாந்து திருச்சபையோ அல்லது மன்ன்னோ அங்கீகரிக்கவில்லை என்பதுதான். ஆங்கில மக்களோ தாய்மொழியில் வேதத்தைப்படிக்க வேண்டும் என்று துடியாய்த் துடித்தார்கள். எதிர்ப்புகள் இருந்தாலும் எட்டாம் ஹென்றிக்கு அர்ப்பணம் என்று அடுத்தடுத்து இரண்டு பதிப்புகள் வெளிவந்தது.
கிரான்மர் மொழியாக்கம்
இதைத் தொடர்ந்து ரோஜர்என்பவர் மத்தேயு என்ற பெயரில் மற்றொரு திருப்பத்தை கொண்டு வந்தார், இதற்கு கிரான்மர் என்ற பேராயர் முகவுறை எழுதியிருந்தார். இதன் சிறப்பு என்னவென்றால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு என்ற அடைமொழியோடு வந்தது தான். இதன் பலனாய் மக்கள் மத்தியில் பைபிளைப் படிக்கும் ஆர்வம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஒவ்வொரு இல்லங்களிலும் பைபிள் தனியிட்த்தைப் பெற்றது.

கிங் ஜேம்ஸ் வெர்சன் (KJV)
டிண்டேலின் ஜெபம் கேட்கப்பட்ட்தற்கான காலம் கனிந்த்து 1603 ஆம் ஆண்டு மாமன்ன்ன் ஜேம்ஸ் இங்கிலாந்து அரசனானான். அனைவரும் படிக்க நல்ல பைபிள் மொழிபெயர்ர்பு வேண்டும் என மக்கள் மன்ன்னிடம் முறையிட்டனர், இதன் விளைவாக 1604 ஆம் ஆண்டு மகா சபை கூட்டப்பட்டு, எடுக்கப்பட்ட முடிவின்படி 54 ஆங்கிலப்புலமை பெற்ற ஆங்கில பண்டிதர்கள் இதற்காக நியமிக்கப்பட்டனர் இதன் விளைவாக நல்லதொரு வேத மொழியாக்கம் உருவாக்கப்பட்டது இதுவே கிங் ஜேம்ஸ் வெர்சன்(K J V) இப்போது ஏராளமான மொழிபெயர்ப்புகள் வந்து விட்ட பின்பும் இந்த கிங் ஜேம்ஸ் வெர்சன் இன்றைய ஆங்கில முறைக்குத் தக்கதாக மாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது.
இனி அடுத்த பதிவில் மறைக்கப்பட்ட மறை நூல்கள் பற்றி அறிந்துகொள்வோமா? (பின் குறிப்பு: ஆங்கில மொழியாக்கம் முழுமையானது அல்ல சுருக்கப்பட்ட வரலாறு ஆகும்)

Comments