ஜெருசலேம் ஆலயம்
அன்பானவர்களே! சென்ற பதிவில் தமிழ்மொழி வளர்ச்சியில் பைபிளின் பங்கு குறித்து விரிவாக அறிந்து கொண்டோம். தமிழ் மொழியில் முதல் பைபிளை மொழிபெயர்த்தது ஒரு ஜெர்மானியர் ஆவார். அவருடைய பெயர் பர்த்தலமேயு சீகன் பால்கு ஆவார். இவர் தன்னுடைய 24 வயதில் 1706 ம் ஆண்டு தமிழ் நாட்டில் தரங்கம்பாடி என்ற இடத்தில் வந்திறங்கினார், இவர் கட்டிய ஆலயத்தின் பெயர் ஜெருசலேம் ஆகும் இதுவே தமிழகத்தின் முதல் பிராட்டஸ்டண்ட் திருச்சபை ஆகும். (இவரது முழு வரலாற்றை அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்) இந்த மிஷனரியே முதன்முதலில் தமிழில் ஒரு அச்சு நூலான பைபிளை வெளியிட்டார்,
சீகன் பால்குவின் கடின முயற்சி
இன்று நான் இந்த கட்டுரையை எழுவதற்கு பல நூல்கள் துனைபுரிகின்றன, ஆனால் அந்தக் காலகட்டத்தில் எந்த நூலும் இவருக்கு உதவிக்கு இல்லை, மேலும் அவரது தாய் மொழி ஜெர்மன் ஆகும், இதனால் தமிழைக்கற்க ஒரு திண்ணைப் பள்ளியில் சேர்ந்தார், அங்கே மணலில் தமிழ் எழுத்துக்களை எழுதப்பழகிக் கொண்டார். பின்பு ஓரளவுக்கு தமிழ் கற்றுக் கொண்டபின் பைபிளை ஜெர்மானிய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கத் தொடங்கினார்,
அச்சு இயந்திரத்தை கப்பலில் வரவழைத்து அதோடு ஒரு அச்சுத்தொழிலாளியையும், தேவையான அளவு காகிதங்களையும் வரவழைத்தார், ஆனால் வரும் வழியிலேயே அச்சுத்தொழிலாளி இறந்துவிட கடினமான தேடுதலுக்குப் பின் ஒரு அச்சு தெரிந்த படைவீரனைக் கண்டுபிடித்து தமிழ் அச்சுக்களை இவரே உருவாக்கி அச்சடிக்கத் தொடங்கினார். இவர் தயாரித்த தமிழ் அச்சுக்கள் மிகப்பெரிதாக இருந்த்தால் காகிதம் பாதியிலேயே தீர்ந்துபோனது. ஆனாலும் விடா முயற்சியுடன் 1715ஆம் ஆண்டு ஜூலை15 ஆம் நாள் பைபிளின் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார், இதுவே தமிழில் வந்த முதல் அச்சுவடிவ புத்தகம் ஆகும்,
இந்த மொழிபெயர்ப்பின் குறைகள்
இந்த மொழிபெயர்ப்பு முற்றிலும் சீகன் பால்கு அவர்களின் சீரீய முயற்சியிலேயே உருவாக்கப்பட்டது, மேலும் தமிழின் வேறு எந்த உரைநடை அச்சு புத்தகமும் இல்லாத்தால் இவருக்கு தெளிந்த வார்த்தைகள் எதுவும் கிடைக்கவில்லை, ஆகவே சாமானியர்கள் பயன்படுத்தும் கொச்சை தமிழிலேயே புத்தகத்தை வெளியிட்டார். மேலும் முந்தைய பதிவில் நாம் பார்த்தபடி தமிழ் மொழி எழுத்துக்கள் இடைவெளியில்லாமலும், மெய் எழுத்துக்கள் புள்ளியில்லாமலும் இருந்த்து மேலும் இவர் பயன்படுத்திய வார்த்தைகள் சில தவறானவைகளாக இருந்தது.
இவர் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகள் சில; உளுகாதிருந்தான்,
தற்போதைய வார்த்தைகள்
|
சீகன் பால்கு பயன்படுத்தியது
|
தேவன்
|
சர்வேசுவரன்
|
அப்பம்
|
கஞ்சி
|
கழுதை
|
நீசவாகனம்
|
ஆவி
|
ஸ்பிரித்து
|
இது போன்ற சில குறைகள் இருந்தாலும் இவரது முயற்சி முதல் வெற்றி ஆகும், ஆனால் முழு வெற்றிக்கு முன்பே இவரது 37 வது வயதில் இவர் காலமானார்.
சரி இப்போது நாம் பயன்படுத்தும் பைபிளில் எபிரேயு மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே இதை மொழியாக்கம் செய்தது யார்? என்பதை அடுத்த பதிவில் காண்போம் காத்திருங்கள்..................
சூப்பர்!
ReplyDeleteGlory to god
ReplyDelete