பைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது?

பழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு
தோரா
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா? தேவனுடைய தாசனாகிய மோசே எழுதிய ஆதியாகமம், யாத்திராகமம்,லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம், ஆகிய ஐந்து புத்தகங்கள் மட்டுமே எபிரேயமக்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்தது இதை அவர்கள் தோரா என அழைத்து வந்தார்கள், இதுதான் பைபிளின் ஆரம்பமாகும், இதைத்தான் இயேசு கிறிஸ்துவும் மோசேயின் ஆகமங்கள் என்று சொல்கிறார். அதன்பின் வந்த காலங்களில் யோசுவா, சாமுவேல், காத், எஸ்ரா போன்ற தீர்க்கதரிசிகள் மூலம் தேவன் கொடுத்த செய்திகள் எல்லாம் தனித்தனியாகப் பிரிந்து கிடந்தன, நேபுகாத் நேச்சார் காலத்தில் பாபிலோன் நாட்டிற்கு இந்த எபிரேயர்கள் அடிமைகளாய் சிறைப்பட்டு போய் மீண்டும் தங்கள் தாய் நாட்டிற்கு வந்த பின்னால் எஸ்ரா என்ற வேத அறிஞர் இவைகளை ஒன்றாகத்திரட்டி ஒரு புத்தகமாக்கினார். இது எபிரேயம் மற்றும் அரமாயிக் மொழியில் இருந்தது
புதிய ஏற்பாடு தோண்றிய வரலாறு
நான் முன்னமே சொன்னபடி இயேசு கிறிஸ்துவின் காலத்திலும் அதன் பின் முதல் நூற்றாண்டு காலத்திலும் புதிய ஏற்பாடு என்ற ஒன்று இல்லை, பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இதுவே ஆதி திருச்சபை மக்களுக்கு வேதமாக இருந்தது, அதே சமயத்தில் சபை கூடி வருகிறபோது கிறிஸ்துவின் வரலாற்றைச் சொல்லும் நற்செய்தி நூல்கள் மற்றும் அப்போஸ்தலர்களின் கடிதங்கள் வாசிக்கப்பட்டன. இப்படி இன்றிரண்டு நூற்றாண்டுகள் கடந்தபின்னால் இவைகள் தொகுக்கப்பட்டு புதிய ஏற்பாடு என்று அழைக்கப்பட்டது.

இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை
பழைய ஏற்பாடு என்பது ஓர் அடிப்படை இது இல்லாமல் புதிய ஏற்பாடு இல்லை காரணம் அதில் உள்ள தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் தான் புதிய ஏற்பாடாகும், அதே ச‌மயம் பழைய ஏற்பாடு மட்டும் போதுமானதல்ல அது ஒரு ஆரம்பமே அதன் முடிவு புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளது இவைகள் தனித்தனி தொகுப்புகள் என்றாலும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்தவை ஆகும்.

யாரால் எழுதப்பட்டது?
சரி இனி முக்கியமான கட்டத்திற்கு வருவோம் இந்த புத்தகங்கள் மனிதர்களால் எழுதப்பட்டது தான் ஆனால் அதில் தொடக்கம் முதல் முடிவு வரை எழுதப்பட்ட‌ காலமும், எழுதப்பட்ட மனிதர்களின் மொழி பன்பாடு நாகரீகம் கல்வியறிவு ஆகியவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகள். இவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் சொல்லப்பட்ட தகவல்கள் ஒரே மாதிரியானவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்தவை, என்ன ஒன்றும் புரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள புரிந்து விடும்

அதாவது பைபிளில் முதல் புத்தகம் முதல் கடைசிப் புத்தகம் வரை எழுத சுமார் 1600 (ஆயிரத்து ஆறுனூறு) ஆண்டுகள் ஆனது, மேலும் எழுதிய மனிதர்களும் முற்றிலும் மாறுபட்டவர்கள் அதாவது மோசே போன்ற தீர்க்கதரிசிகள் எஸ்ரா போன்ற ஆசாரியன். தாவீது போன்ற அரசர்கள், தானியேல் போன்ற அமைச்சர்கள், பவுல் போன்ற அறிஞர்கள், பேதுரு போன்ற மீனவர்கள், லூக்கா போன்ற மருத்துவன், என பலதரப்பட்ட 40 மனிதர்களால் எழுத்தப்பட்டது தான் பைபிள், மேலும் இவர்கள் வாழந்த காலமும் இடமும் ஒன்றோடு ஒன்று முற்றிலும் மாறுபட்டவை.

எழுதப்பட்ட மொழிகள்
அதோடு அல்லாமல் எழுதப்பட்ட மூல மொழிகளிலும் வேறுபாடுகள் உண்டு பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதிகள் எபிரேய மொழியிலும், சில பகுதிகள் அரமாயிக் மொழியிலும் எழுத்தப்பட்டது, புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டது இப்படி பன் மொழியில் எழுதப்பட்டதுதான் பைபிள், ஒரு வேளை இவைகள் வேறு வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் எழுதப்பட்ட இடங்கள் ஒன்றாக இருக்குமோ என நீங்கள் நினைப்பது தெரிகிறது அதுதான் இல்லை

எழுதப்பட்ட இடங்கள்
மோசே பாலஸ்தீனாவிற்கு வெளியே எழுதினார். கானான் தேசத்தில் பலர் எழுதினார்கள், பாபிலோனிலிருந்தும், தாவீது பாலைவனத்திலிருந்தும் அரச சிம்மாசனத்திலுமிருந்தும், புதிய ஏற்பாட்டுக் கடிதங்களை ஆசிய ஐரோப்பிய கண்ட முக்கிய நகரங்களில் இருந்தும் எழுத்தப்பட்டது

பைபிளின் ஆசிரியர்
என்னங்க இது யார் யாரோ எங்கெங்கிருந்தோ எழுதியதாகச் சொல்கிறீர்கள் அப்படியானால் இது எப்படி ஒரே புத்தகமாக இருக்க முடியும் என நீங்க நினப்பது தெரிகிறது, நீங்கள் நினைப்பது போல் இந்த புத்தகங்கள் எழுதியவர்கள் வேறு வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்னிலையில் வாழ்ந்திருந்தாலும், இதில் எப்படி ஒற்றுமை வந்தது, என அறிவது மிகவும் முக்கியமான காரியம்।,ஆம் மருத்துவனாக இருந்தாலும் கல்வி வாசனை இல்லாத மீனவனானாலும் அறிஞனானாலும் ஒரே நோக்கத்தில் ஒரே அறிவோடு எழுதக் காரணம் திரித்துவ கிறிஸ்துவின் ஒருவராகிய பரிசுத்த ஆவியானவரே இந்த ஒற்றுமைக்கு காரணம், ஆம் அவரே இதை எழுதிய மனிதர்களில் நிறைந்து எழுதுவித்தார்।

ஆகவே தான் இது தொடக்கம் முதல் இறுதிவரை பின்னிப் பினைந்திருக்கிறது, அதாவது பைபிளில் தொடக்க வசனமான ஆதியாகமம் முதல் அதிகாரத்தைப் பார்த்தால், "ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்" என்று சொல்லப்படுள்ளது. அதே போல கடைசி புத்தகமான வெளிப்படுத்தல் கடைசி அதிகாரத்தில் "ஆவியும் மனவாட்டியும் வா என்கிறார்கள்" என்று சொல்லப்படுள்ளது. இதுவே பைபிளின் தொடக்கம் முதல் முடிவு வரை பரிசுத்த ஆவியானவரே நீக்கமர நிறைந்திருக்கிறார் எனபதைத் தெளிவாக்கும்.எனவே பைபிளின் ஆசிரியர் பரிசுத்த ஆவியானவரே எனபது தெள்ளத் தெளிவாகிறது। சரி அது என்ன பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, எபிரேயர்கள்? அடுத்த பதிவில் பார்க்கலாமா?

Comments

  1. இயேசு ஒரு பௌத்த துறவி. அவர் பௌத்த அறத்தை போத்தித்தனால்தான் கொல்லப்பட்டார். புதிய ஏற்பாட்டில் உள்ள கடிதங்களின் அதிகாரங்கள் பௌத்த சங்கங்களுக்கு எழுதப்பட்டவை.

    ReplyDelete
    Replies
    1. ஆதாரம் இருக்கா சகோ

      Delete
    2. https://www.youtube.com/watch?v=l5rn5ZL9eWQ

      Delete

Post a Comment