பல கோடி ரூபா‌‌ய் ம‌தி‌ப்பு‌ள்ள ‌11 சிலைக‌ள் ‌மீ‌‌ட்பு; பா‌தி‌ரியா‌ர் உ‌ள்பட 11 பே‌ர் கைது

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சிலைகள் திருட்டு கும்பலிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் இது தொடர்பாக பாதிரியார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எ‌ன்று‌ம் தமிழக சிலை தடுப்பு கூடுதல் டி.ஜி.பி திலகவதி கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூ‌றிய அவ‌ர், சென்னை பெரிமேட்டில் உள்ள ஒரு விடுதியில் சிலை திருட்டு கும்பல் தங்கியிருப்பதாக வ‌ந்த தகவ‌‌லி‌ன் பே‌ரி‌ல் தனிப்படை அந்த விடுதியை முற்றுகையிட்டது. அங்கு தங்கியிருந்த வேலூர் மாவட்டம் பள்ளூரைச் சேர்ந்த இம்மானுவேல் என்கிற பாதிரியார், திருநெல்வேலி மாவட்டம் செல்லிய நல்லூரைச் சேர்ந்த மாடசாமி, ராஜபாளையத்தைச் சேர்ந்த பிச்சை மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அங்கிருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையை காவ‌ல்துறை‌யின‌ர் மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம் பள்ளூரைச் சேர்ந்த ஜெகன்நாதன், வேலு ஆகிய இருவரும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சிலைகளை திருடி விற்பனைக்காக இம்மானுவேலுவிடம் கொடுத்தது தெரியவந்தது.

அவர்கள் ஈராலச்சேரி என்ற இடத்தில் ஒரு கோ‌யிலில் கிருஷ்ணர், ராதை, ருக்மணி, விநாயகர் ஆகிய ஐம்பொன் சிலைகளை திருடியிருக்கின்றனர். இதில் கிருஷ்ணர் சிலையை மட்டும் விற்பதற்காக கொடுத்து உள்ளனர். மற்ற சிலைகள் ஜெகன்நாதனின் வீட்டிற்கு முன்பு ஆற்றங்கரை ஓரமாக புதைக்கப்பட்டிருந்தது. அவற்றை தோண்டி மீட்டிருக்கிறோம்.

இந்த சிலைகளை பாண்டிச்சேரி அருகே உள்ள கோட்டங்குப்பத்தில் பழங்கால சிலைகளை விற்கும் மாரிசாமியிடம் விற்பதற்கு அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். தமிழகத்தில் திருடப்படும் சிலைகளை மாரிசாமி அய‌ல்நாடுகளுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மாரிசாமி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 மகாவீரர் ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை திருவண்ணாமலை மாவட்டம் ஈசாகுளம் என்ற இடத்தில் உள்ள புகழ்பெற்ற திகம்பரர் ஜெயின் கோ‌யிலிருந்து திருடப்பட்டதாகவும். இவற்றை பிச்சுமணி திருடி, மாரிசாமியிடம் விற்று இருக்கிறார்.

ஐந்து மகாவீரர் ஐம்பொன் சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன. இதேபோல சிற்றுடையூர் லட்சுமி நாராயணன் பெருமாள் கோயி‌லி‌ல் இருந்து நாராயணன், விநாயகர் ஆகிய சிலைகளை கங்காஜலம், வைத்தி ஆகிய இருவரும் திருடி மாரிசாமி யிடம் விற்றிருக்கிறார்கள். அந்த சிலைகளும் மீட்கப்பட்டு உள்ளன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 11 விலை உயர்ந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாரிசாமி, இம்மானு வேல், ஜெகன்நாதன், வேலு, மாடசாமி, பிச்சுமணி, கங்காஜலம் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளன‌ர் எ‌ன்று ‌திலகவ‌தி கூ‌றினா‌ர்.

(இந்த உலகில் அநேக கிறிஸ்தவர்கள் பாவத்தில் விழுந்து கொண்டு இருகிறார்கள் வேதம் சொன்னப்படி இது கடைசிகாலம் :
KbTghpae;jk; epiyepw;gtNd ,ul;rpf;fg;gLthd;. இதே இந்த பா‌தி‌ரியா‌ர் போல் அநேகர் இருகிறார்கள் எனவே கவனமாக இருங்கள் )

Comments