இஸ்கான்(ISKON) எனப்படும் கிருஷ்ணர் கோவில் வளாகத்தில் உள்ள ஆசிரமத்தில் வன்புணர்ச்சி நிகழ்வு நடந்துள்ளது .


இந்தியாவில் நடக்கும் எல்லா பாலியல் குற்றங்களும் வெளிவருவதில்லை. டெல்லி பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை போல் கொடுமைகள் நாடெங்கும் நடத்து கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் வன்புணர்ச்சி என்பது ஒரு பெரிய நிகழ்வு இல்லை என்பது போலாகிவிட்டது. 
அந்த வகையில் அண்மையில் சாண்டி ஹிக்கின்ஸ் என்ற அமெரிக்க பெண் ஒருவருக்கு மும்பையில் உள்ள இஸ்கான்(ISKON) எனப்படும் கிருஷ்ணர் கோவில் வளாகத்தில் உள்ள ஆசிரமத்தில் வன்புணர்ச்சி நிகழ்வு நடந்துள்ளது . இதை பெரிய ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரவில்லை.
இந்த பெண்ணுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டு பின்பு வன்புணர்ச்சிக்கு ஆளாகப்பட்டுள்ளார். இவரது போதை தெளியும் முன்பே வன்புணர்ச்சி செய்தவன் அவன் வந்த காரியத்தை முடித்து விட்டான் . போதை தெளிந்ததும் அவன் ஓட்டம் பிடித்துள்ளான் . இவை அனைத்தும் ஆசிரம வளாகத்தின் விடுதியில் ஓர் இரவில் நடந்துள்ளது. ஆசிரமம் என்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து தான் வெளிநாட்டவர் அங்கு வந்து தங்குகிறார்கள் . ஆனால் ஆசிரமங்கள் இப்போது பாதுகாப்பற்ற நிலையில், கயவர்களின் கூடாரமாக மாறிவிட்டது இதன் மூலம் அறிய முடிகிறது.
இந்தப் பெண்ணை வன்புணர்வு செய்த கயவனை இது வரை காவல்துறை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெண் இது குறித்து மற்றவர்களுக்கு தெரிவிக்கையில் , ‘நீ முதல் முறையாக கற்பை இழந்துள்ளயா அல்லது ஏற்கனவே கற்பை இழந்துள்ளயா’ என்று கேட்டுள்ளனர் சிலர். மேலும் இந்த நாட்டில் பெண்கள் கற்பழிக்கப்படுவது என்பது சாதாரண விடயம் தான் என்று சிலர் ஆறுதல் கூறியுள்ளனர் .
இருப்பினும் இந்த பெண் துணிவாக தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை காணொளியாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் . புதிய இடங்களுக்கு , ஆசிரமங்களுக்கு பயணம் செய்யும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் . இதை மற்றவர்களும் அறியும் படி செய்யுங்கள்.

சாண்டி அளித்துள்ள காணொளி இணைப்பு
http://www.mtvdesi.com/raped-in-an-ashram

Comments