நத்தார் பண்டிகை - Part Two

வேதாகமத்தில் பாவத்தை பல முறைகளில் பார்க்கிறார்கள்:
• கர்த்தருக்கு விரோதமான குற்றமாகவும்,
• மன்னிக்கப்படவேண்டிய குற்றமாகவும்,
• பரிசுத்தம் செய்யப்படவேண்டிய குற்றமாகவும்
• அடிமைத்தனக் குற்றமாகவும்
• விடுதலைசெய்யப்படவேண்டிய குற்றமாகவும்
• நட்பைக் கெடுத்த குற்றமாகவும்
இவைகள் யாவும் சமரசம்செய்து சரிசெய்யப்பட வேண்டியவையாகும். எப்படிப்பட்ட குற்றமாயினும் அவை இயேசுக்கிறிஸ்துவின் கிரியையினால் சரிசெய்யப்படும்.
• அவரினால் பாவமன்னிப்பு செய்யப்பட்டுள்ளது,
• பரிசுத்தம்செய்யப்பட்டுள்ளத
ு,
• விடுதலை கொடுக்கப்பட்டுள்ளது,
• ரத்துச் செய்யப் பட்டுள்ளது,
• வெற்றி கொடுக்கப் பட்டுள்ளது,
• சமரசம்செய்யப்பட்டுள்ளது

பாவமானது கர்த்தருக்கு விரோதமானது எனக்கருதப்படுகிறது, இது நியாயப்பிரமா ணத்தை மீறுதல் எனவும் கருதப்படும். கர்த்தருடைய நியாயப் பிரமாணமானது ,பொதுவான சட்டங்கள் போன்றதாகும், இதில் சட்டத்தை மீறுபவர் குற்றம் சுமத்தப்படுவார். இதில் சட்டத்தை மீறுபவர் எந்தவிதத்திலும் தப்பவே முடியாது,
கிறிஸ்த்துவின் நிகழ்காலசெயற்பாடு:- கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் “எல்லாம் முடிந்த்து” என்றும் பின் உயிர்த்தெழுந்து பரத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு நிகழ்காலசெயற்பாடானது ஆரம்பமாகின்றது.
1. அவருடைய முதலாவது பகுதியாக பரிசுத்த ஆவியானவரை தனது மக்களுக்குள் ஜீவிப்பதற்காக அனுப்பிவைப்பதாகும்.
மேலறையில் தன்னுடைய சீஷர்களைப்பார்த்கூறினார் “ நான் போகிறது உங்களுக்குப் பியோசனமாயிருக்கும், நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான்போவேனாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். (யோவான். 16:7)பென்தகோத்து நாளிலே பேதுரு இந்த வாக்குத் தத்தம் நிறைவுபெற்றது என்று கூறினார். “ அவர் தேவனுடைய வலதுகரத்தினால் உயர்த்தப்பட்டு , பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப்பெற்று , நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழுந்தருளினார்.” ( அப். 2:33)
பரிசுத்த ஆவியின் வாக்குத்தத்தம் பற்றி யோவான்ஸ்நானகனால் முன்பு கூறப்பட்டிருந்தது.” எனக்குப்பின் ஒருவர் வருகிறார், என்னில் பார்க்கவும் அவர் பெரியவர், அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்” ( மாற்.1:8)
2. இயேசுக்கிறிஸ்துவின் நிகழ்கால செயற்பாடானது பரிந்துபேசுதலாகும் . பரிசுத்த பவுல் ரோமருக்கு எழுதும் நிருபத்துல் “கிறிஸ்துவே மரித்தவர், அவரே எழுந்துமிருக்கிறார், அவரே தேவனுடைய வலது பாரிசத்திலுமிருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.” (ரோமர் 8:34) எபிரேய நிருபத்தை எழுதியவர் சொல்லுகியார் “ தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால், அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபிரேயர். 7:25) பிரதான ஆசாரியராகிய இயேசுவுக்கு இருக்கும் விஷேசித்த தன்மையை இங்கு காணுகி றோம்.
தம்முடைய ஜனங்களின் பிரதிநிதியாக கர்த்தரோடு இயேசு இருந்து தம்முடைய மக்களின் ஆவிக்குரிய வேண்டுதல்களைக் கேட்டு அவற்றிற்கு பதிலளிக்கிறார்.அவர் தன்னை விசுவாசிப்பவர்களுள்கு ஓர் வல்லமையான ஒத்தாசை புரிபவராக இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

சங்கீதம் 110:1 “நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்றார்” இந்த வார்த்தை புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நிறைவேறியுள்ளது. கிறிஸ்து உயர்த்தப்பட்ட இடத்திலிருந்தே தனது எதிரிகள் அகற்றப்படும் வரை ஆளுகைசெய்தல் வேண்டும் என்று பொருள்படுகின்றது. அந்த எதிரிகள் ஆவிக்குரிய உலகத்திற்குரியவர்கள். “ பரிகரிக்கப்படும் கடைசிச் சத்துரு மரணமே: ( 1கொரி. 15:26) இயேசுக்கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் போது மரணத்திற்கு அழிவு ஏற்பட்டது.
கிறிஸ்துவின் எதிர்காலச்செயற்பாடு:- உலகத்தில் ஊழியம்செய்து கொண்டிருக்கும் காலத்தில், இதைவிட பெரிய வேலை எதிர்காலத்தில் செய்ய வேண்டியிருக்கிறது என்று இயேசு சொன்னார். அவர் விஷேசமாக இரண்டு வேலைகள் பற்றிக் கூறினார்.
1. மரித் தோரை உயிர்தெழச் செய்தல்
2. அவர்களுக்குரிய நியாயத்தீர்ப்புச் செய்தல்.
உயிர்த்தெழச் செய்தலும் நியாயத்தீர்ப்புச்செய்வதும் கர்த்தருடைய விஷேசித்த அதிகாரம்கொண்டவையாகும். இந்த இரண்டு வேலைகளையும் கடைசிக்காலத்தில் குமாரனாகிய இயேசு நிறை வேற்றுவார், தேவகுமாரனை விசுவாசித்து ஆவிக்குரிய மரணத்தையடைந்த அத்தனைபேர்களும் புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்வார்கள்.
இயேசுக் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது உயித்தெழுதலும் நியாயத் தீர்ப்பும் நடைபெறும். எல்லா ஜீவன்களும் அந்த நாளுக்காக காத்திருக்கும் ஏனென்றால் அவை “ அடிமைத்தனத்திலிருந்து விதலையாக்கப்பட்டு ,தேவனுடைய பிள்ளைக்குரிய மகிமையான சுயாதீனத்தைப்பெற்றுக் கொள்ளும்” என்ற நம்பிக்கையாகும்..(றோமர் 8:20)
நிகழ்காலவேலையும் எதிர்காலவேலையாகிய இரண்டும் “ எல்லாம் முடிந்தது” என்ற அவருடைய வேலைத்திட்டத்திலேயே தங்கியுள்ளது. “ எல்லாம் முடிந்தது” என்ற வேலையானது தனது மக்களின் “ நல்ல வேலையின்” ஆரம்பமாகும். கிறிஸ்து வரும்வரை இந்தவேலை தொடர்ந்து கொண்டேயிருக்கும் (பிலி. 1:5-6) அப்பொழுது முழு உலகமும் இயேசுவில் ஐக்கியப்பட்டிருக்கும்.( எபேசி 1:9-10)
இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.

கிறிஸ்துவிற்குள் ஜீவித்து அவருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ஆயத்தப்படுவோமாக

கிறிஸ்துவிற்குள் அன்பான

திராணி.

Comments