பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் (Part II)

இது மாந்திரிகளால்செய்யப்பட்ட நட்சத்திரமாகவிருந்தது, இது ஒரு மாயவித்தை உலகத்தைச் சார்ந்த்து. அந்த நாட்களில நான் மாய வித்தைசம்பவங்களில், அதனுடைய அடையாளங்களில், அதன் செயற்பாடுகளில் அதிக அக்கறைகொள்ளவில்லை.ஆயினும் அது ஒரு கெட்டஅசுத்த அடையாளம் என்பது எனக்குத்தெரியும். அது அவளுடைய உடலுக்குநோய்வராமல் பாதுகாக்கும் தாயத்தைப்போன்றதும், அசுத்த ஆவிகளை அவளது உடலுக்குள் கொண்டுவரக்கூயதுமாகும்.

கழுத்திலிருக்கும் நட்சத் திரத்தை அகற்றிவிட்டும் இதனோடுசெயற்படும் அசுத்த ஆவிகளையும் அகற்றம் வரை உனக்கு சுதந்திரம் கிடையாது என்று கரோலினிடம் கூறினேன்.
அவள் அதனைத் தனது கழுத்திலிருந்து கழற்றி நிலத்தில் எறிந்தாள், அவள் மாயவித்தைகளை அகற்றிவிடுவேன் என்றும், துள்ளல் இசைகேட்கும் ஆசையையும், தன்னுடைய முரட்டுத்தனமான நடத்தைகளையும், சுய விருப்பங்களையும் அறிக்கைசெய்தாள். உடனடியாக பிசாசிற்கும் எங்களுக்கும்நேரடி வாதங்கள் ஏற்பட்டன. தகப்பனே அவைகள் “என்னைச் சுற்றி வருகின்றன , எனக்குப் பயமாகவிருக்கிறது “ என்று அவள் அழுதாள். “ அவைகள் எனது வாழ்க்கையில் ஒர் பிடியைவைத்திருக்கின்றன, அவைகள் என்னை விட்டு அகன்றுபோக நான் விரும்புகிறேன் “ என்று கூறினாள். தயவுசெய்து இவற்றை அகற்ற எனக்கு உதவிசெய்யும் தகப்பனே என்ற கூறினாள்.
“ எனது மகளை விட்டுவெளியேபோ என்று கட்டளையிட்டேன். உன்னுடன் வைத்துள்ள எல்லா உறவுகளையும் அவள் முறித்துக்கொண்டாள், உனது எஜமானை சிலுவையிலே வெற்றி கொண்ட எனது எஜமானாகிய கர்த்தர்ராகிய இயேசுக்கிறி ஸ்த்துவின் நாமத்தினாலும், அதிகாரத் தினாலும், வெளியேறு!, அவளைத் தனியே விடு!, கரோலினை விட்டு வெளி யேறும் படியும் மீண்டும் அவளது உடலுக்குள் வரக்கூடாது என்றும் உனக்கு கட்டளையிடு கின்றேன்.அவளது வாழ்க்கையை விட்டு வெளியேறு! அவளைத் தனியே விடு. கரோலின் உனக்குரியவளல்ல, அவள் தனது வாழ்க்கையை கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவிடம்கொடுத்
து விட்டாள் என்று ஜெபித்தேன்.

சிலநிமிடங்களில் பிரச்சனைகள் ஓய்ந்தன. கரோலின் அமைதியடைந்தாள், அவள் தன்னை விடுதலையாக்கிய கர்த்தரை மிகவும் சந்தேஷத்தோடு துதித்தாள். அசுத்த ஆவி அவளை விட்டு அகன்றுவிட்டது. நாங்கள் இருவரும் கர்த்தருக்கு அவருடைய கிருபைக்காக அசுத்த ஆவிகளை அகற்றியதற்காக நன்றிசொல்லி அழுது துதித்தோம்.போர் முடிந்தது என்ற சந்தோஷத்தில் நித்திரைக்காக கட்டிலுக்குச்சென்றோம்.அதிகாலை 2 மணியளவில் கரோலின் பலத்த சத்தமாக எனது அறைக் கதவைத் தட்டினாள். தகப்பனே திருப்பவும் பிசாசுகள் வந்துவிட்டன! என்று குளறினாள், என்னைக் காப்பாற்றுங்கள், அவைகள் எனது கட்டிலின் கீழிருந்து வருகின்றன, அவை எனக்குள் மீண்டும்வர விரும்புகின்றன.
நான் அவளோடு அவளது அறைக்குள்சென்றேன், “ உன்னுடைய கட்டிலின்கீழ் என்ன வைத்திருக்கின்றாய் என அவளைக்கேட்டேன், “ . அந்த நட்சத்திரங்கள் பல நிறைந்த பெட்டியொன்ற வைத்துள்ளேன்.தயவுசெய்து அவற்றைவெளியே எடுத்து எறியுங்கள் தகப்பனே என்றாள். . “இல்லை கரோலின் நீயே எடுத்து எறி” நீயே இதைச்செய்யவேண்டும் என்ற நான் கூறினேன்.: “ உன்னுடைய விருப்பத்திலே அதனோடு இணைந்தாய், இப்போது உன்னுடைய விருப்திலேயே அதை விட்டுவெளியே வரவேண்டும்” என்றேன், தனக்குப் பயமாக்க இருக்கிறது என்றாள். ஆனால் நீங்கள் எனக்கு உதவினால் நான்செய்கிறேன் என்றாள். “ தகப்பனே எனக்காக அவற்றை அழிப்பீர்களா என்றாள். அவைகள்மேல் நான்கைபோட விரும்ப வில்லை என்றாள்.
“ இல்லை” என்று சொன்னேன் நீயே அதைச்செய்ய வேண்டுமென்றேன். ஆவியின் உலகத்திற்குத்தெரியவேண்டும் நீ தான் முழுத்தொடர்பையும் துண்டிக்கிறாய் என்று கூறினேன். நான்வெளி முற்றத்திற்குச் செல்கிறேன், ஆனால் நீயே உனக்காக இவற்றைச் செய்யவேண்டும் என்றேன்.” அவளே அதைச்செய்து முடித்தாள். அவளது அறைக்கு மீண்டும் ஒரு ஜெபம் செய்வதற்காகத் திரும்பினோம். நான் அவளுக்குச் சொன்னேன், உனது பிசாசு பிடித்த நண்பனினாலும், பிசாசின் இசைகளைக் கேட்டதினாலும் பிசாசு உன்னைத் தாக்கியது என்று விளங்கப்படுத்தினேன்.
இதன் பிற்பாடு கரோலின் பிசாசின் இசைகளைக் கேட்பதில்லை. மந்திரவித்தை காட்டு பவர்களை , குழப்பம் செய்பவர்கள், அரைகுறை ஆடை அணிபவர்கள், தீமையான பழக்க வழக்கங்களில் ஈடுபடுபவர்கள், போன்றவர்களை அடிளோடு வெறுத்தாள் ஒருவரோடும் சேருவதுமில்லை. எங்கள் வீடுகளில் நாம் அவர்களை அனுமதிப் பதுமில்லை.
நானும் எனது மனைவியும் விடுமுறை பெற்றுக்கொள்ளாமல் ஊழியத்திலேயே மிகவும் அக்கறை காட்டினோம், எங்கள் பிள்ளைகளைக் கவனிக்வில்லை. நான் ஊழியத்திற் காகவும் , கருத்தரங்குகள் நடத்து வதற்காகவும், குடும்பத்தை விட்டு அனேக தடவைகள் தூரத்திலே இருந்திருக்கின்றேன். எனது மனைவியும் ஊழிய கருத்தரங்குகள் நடத்துவதிலும், ஊழியத் திற்கு ஒத்தாசை செய்பவர்களோடு தொடர்பு கொள்வதிலும் அக்றையாகவிருந்தாள்.
தலை முடி நீளமாக வளர்த்த ஹிப்பி என்று அழைக்கப்படும் சமுதாயச் சட்டதிட்ங்களின் படி வாழவிரும்பாத இளைஞர் கூட்டத்தாரோடு எங்களுக்குத் தெரியாத ஒருவரினால் கரோலி னோடு நட்பு ஏற்படுத்தப்பட்டது. அவளது நண்பன் ஹிப்பிகளின் இசையைக்கேட்பதிலும் அதிலே மெய்மறந்த நிலைக்குச் செல்வதையும் கற்றுக்கொடுத்திருந்தார்கள். அந்த இசைகளைக் கேட்கும்போது தான் மெய்மறந்த நிலைக்குச் செல்வதை அவள் அனுபவித் திருந்தாள்.
கரோலின் அசுத்த இசைகளைக் கேட்டு மெய்மறந்த நிலைக்குச் செல்வதைக் கைவிட்டு கர்த்தரிடம் பாவ அறிக்கைசெய்து கொண்டாள். கர்த்தருக்கு அருவருப்பூட்டும் சகலவிதமாக இசைச் சாதனங்களையும் கரோலின் அழித்துவிட்டாள். இதுவே எனது கிறிஸ்தவர்களின் வாழ்வு பற்றிய பிந்திய முக்கிய உலகக் கண்ணோட்டத்தின் ஆரம்பமாகியது. உண்மையான விசுவாசிகள், வழக்கத்திற்கு மாறான பாவச் சூழ்நிலையின்கீழ், பிசாசின் பாதி கட்டுப்பாட்டின் வரக்கூடியவர்கள் யார் என்பதையும் , கண்டுகொள்ளப் பல வருடங்கள்சென்றன ஆனால் இப்படிப்பட்டவர்களை அடையாளங்கண்டு அவர்களைப் பிசாசின் பிடியிலிருந்து மீட்கும் ஊழியத்தில் நான் ஈடுபட்டுள்ளேன்.
சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் எங்களுக்கு மிகவும் ஆபத்தான எதிரிகள் என்பதை நாம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவர்கள் உண்மையான விசுவாசிகளுக்கு, சபைகளுக்கு, மற்றும் கிறுஸ்தவ நிறுவனங்களுக்கு மிகவும் எதிரானவர்கள் என்பதை நாம் கவனத்தில்கொள்ளவேண்டும். எபேசியர். 6 : 10-20, யாக் 4: 7-8, 1பேதுரு 5: 8-11 ஆகியவற்றையும் ஆவிக்குரிய யுத்தங்கள் பற்றியும் நாம் பிழையின்றி அறிந்திருக்கலாம். இதில் முக்கிய விடயமென்னவென்றால் சாத்தானாலும் பிசாசினாலும் எங்களுக்கு எதிராக வீசப்படும் வல்லமைகளை நாம் முற்றுமுழுதாக அறிந்திருக்கிறோமா? என்பதாகும்.கர்த்தருடைய வார்த்தையை அசட்டைபண்ணும் விசுவாசிகளுக்கும், எதிராக நடக்கும் விசுவாசிகளுக்கும் சாத்தான் என்னசெய்வான் என்று உண்மையில் எங்களுக்குத்தெரியுமா?

பிசாசின் தாக்கத்தின் உண்மைத் தன்மை: வேதாகமத்தின் குறிப்புக்களும் அனுபவங்களும்.
சிலவேளைகளில் அதிக விவாதத்திற்குரிய கேள்வி என்னவென்றால். “ உண்மையான விசுவாசி பிசாசினால் தாக்கத்திற்குள்ளாவானா? இங்கு பிசாசு பீடித்தல் பற்றி நான் பேச வில்லை என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். பிசாசு பீடித்தல் என்பது ஒருவரை தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதாகும். கிறிஸ்தவர்கள், கீழ்ப்படியாதவர்களும் கூட, கர்த்தருக்குரியவர்கள், சாத்தானுக்குரியவர்களல்ல. சாத்தான் அவர்களை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த முடியாது. எப்படியோ, பிசாசின் தாக்கம் என்பது சற்று வித்தியாசமானது. பிசாசின் தாக்கம் என்பது சாத்தான் தன்னுடைய பிசாசுகள் மூலமாகநேரடியாகத் தாக்குகின்றான், ஒரு கிறிஸ்தவனுடைய அல்லது கிறிஸ்தவனல்லாத ஒருவருடைய வாழ்க்கையில், ஒரு குறிப்பிட்ட பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுதலாகும்.
கிறிஸ்தவர்களுக்கு இப்படி நடக்குமா?
வேதாகமத்தின் பிரகாரமும், கிறிஸ்தவர்களின் அனுபவத்தின்படியும் இது முடியும். பிசாசு வீழ்ந்ததைப்போல் வீழ்ந்து தண்டனைக்கு உட்படவேண்டா மென்று கிறிஸ்தவர்களை வேதாகமம் எச்சரிக்கின்றது அல்லது பிசாசின் வலையில் விழவேண்டாமென்று எசரிக்கின்றது.( 1 திமேத் 3: 6-7) அவைகள் “ விசுவாசிகள் பிசாசின் பக்கம் சாய்கிறார்கள்” என்று கூறுகின்றன. ( 1 திமே. 5:15) சாத்தான் தாக்குகிறது என்று கூறுகிறது. அவர்கள் எப்படி “சாத்தானை விசுவாசத்தில் உறுதியாக எதிர்பது என்று அறியாவிட்டால்” அவர்கள் “பிசாசினால் விழுங்கப்படுவார்கள்”. (1பேதுரு 5: 8-9) இவைகள் மிகவும் கடுமையான வார்த்தைகள், சாத்தானுடைய திட்டங்களை அறியாத விசுவாசிகள் மிகவும் ஆபத்தில் விழுவார்கள் என்று பரிசுத்த பவுல் எழுதுகின்றார்.( 2கொரி. 2:11)
(Westchester, Ill.: Crossway, 1989 Murphy, Edward F.: Handbook for Spiritual Warfare. என்ற புத்தகத்திலிருந்து பெறப் பட்டவை நன்றி ).


சாத்தான் :-குற்றம் சுமத்துபவர்
1. அச[த்த ஆவிகளின் அரசன், கர்த்தரினதும் கிறிஸ்துவினதும் நிலையான எதிரி.
2. கர்த்தரிடம் நம்பிக்கையிழக்கச்செய்து பாவம்செய்யத் தூண்டுவான்.
3. தன்னுடைய தந்திரத்தின்மூலம் மனிதர்களை ஏமாற்றுவான்.
4. சுரூப ஆராதனை செய்பவர்களை அவனுடைய கட்டுப்பாட்டில்வைத்துக்கொள்ளுவான்.
5. அவனுடைய பிசாசுகள்மூலம் மனிதர்களைக் கட்டுப்படுத்த முடிவதுடன்,நோயினாலும் பாதிப்படையச் செய்கிறான்.
6. தேவனுடைய உதவியுடன் அவன் வெற்றிகொள்கிறான்.
7. வானத்திலிருந்து இயேசுக்கிறிஸ்து மீண்டும் வரும்போது அவன் ஆயிரம் வருடங்கள் சங்கிலியால் கட்டப்படுவான்,ஆனால் ஆயிரம் வருடங்கள் முடிந்தபின்பு இன்னும் அதிக பலத்துடன் பூமியில் உலாவுவான், ஆனால் சிறிதுகாலத்தில் நித்திய தண்டனைக்குள்ளாவான்.
8. சாத்தான் ஒரு மனிதனுக்கூடாகச்செயற்பட்டு எங்களை ஏமாற்றுவான்...

சாத்தான் யார் என்பதையும், பிசாசுகள் யார் என்பதையும் அவர்களின் முக்கிய கடமைகள் யாவை என்பதையும் நாம் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும்.

கர்த்தரையும் அவரை உண்மையாய் ஆராதிப்பவர்களையும் எதிர்பதும் கர்த்தரைவிட்டு அவர் களை வழிவிலகச் செய்வதுமே அவனது பிரதான தொழில்களாகும்.

எங்களைச் சூழ்ந்துள்ள மூன்று மட்டத்திலான பாதகாப்புகள்.
1. பாது காப்பு எல்லை(யோபு 1-2)
2. கர்த்தருடைய தூதர்கள், (சங். 34:7, 91: 11-13, எபி. 1:14)
3. விசுவாசக் கேடயம். ( எபேசி. 6: 16)

எங்கள் சரீரம் மூன்று அமைப்புகளைக்கொண்டுள்ளது. 1. சரீரம். 2. ஆத்துமா. 3. ஆவி.
சரீரம் (றோமர் 12:1-2 றோமர் 6: 13.)
எங்கள் சரிரங்களை பரிசுத்தமாகவும்தேவனுக்குப் பிரியமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க
வேண்டும். இந்த உலகத்திற்கு ஏற்றவேடம் தரியாமல்,தேவனுடைய சித்த்த்தை அறிந்து
அதன்படி செயற்படல்வேண்டும்.எங்கள் அவயவங்களை பாவத்திற்கு ஒப்புக்கொடாமல்
அவைகளை நீதியின் வழியில்செயற்படுத்தவேண்டும்.
ஆத்துமா :- கர்த்தரைப்பற்றிய சிந்தனையோடு இருத்தல்வேண்டும்.எங்கள் சிந்தனைகள் எப்போதும் தேவனுக்குப் பிரியமானவைகளாக இருத்தல்வேண்டும். (2கொரி. 10: 3-5., பிலி. 4:8.)
உணர்வுகள்:-கர்த்தர் விரும்புவதைச் செய்ய வேண்டும் ,வெறுப்பவை களை வெறுக்கவேண்டும்.
விருப்பங்கள் :- கர்த்தர் தெரிவுசெய்வதை தெரிவுசெய்யவேண்டும், கர்த்தர் தள்ளிவிடுவதை தள்ளிவிடல்வேண்டும்.
உடல் சார்ந்த ஆசைகள் :-
எங்கள் சரீரங்களை நீதிக்குப் பயன்படுத்த ஒப்புக் கொடுக்க வேண்டும்.(கலா. 5:16-21, 24, 2:20)
ஆவி:-
1. மறு பிறப்படைவதற்கு முன்பு, எங்களில் ஆவி இருந்த்து, ஆனால் செத்த்தாய் இருந்தது. அதாவது கர்த்தரோடு தொடர்பில்லாமல் இருந்தது.
2. மறுபிப்படைதல் என்பது எங்கள் ஆவி மறுபடியும் பிறத்தலாகும். அதாவது கர்த்தருடன் தொடர்பு ஏற்படுத்தலாகும்.(1.கொரி. 6:17, 1கொரி.2: 6- 16,கலாத்.4:6, 5:16)
3. பாவமானது ஆவி, ஆத்தும, சரீரத்தைக் கறைப்படுத்துகிறது.( 2.கொரி. 7:1 2. திமே.4 : 22, 1.தெச.5:23.)


பரிசுத்த ஆவியோடு எங்கள் ஆவியும் ஆத்துமாவும் சரீரமும் இணைந்துசெயற்பட்டால் அவருடைய பாதுகாப்பு எல்லைக்குள் நாம் ஜீவிக்கமுடியும், எங்களுக்கு கர்த்தருடைய தூதர்கள் போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.எங்களுடைய ஆவி பரிசுத்த ஆவியுடன் இணைந்து தேவ காரியங்களைச் செயற்படுத்திக் கொண்டு தேவனை மகிமைப்படுத்தும்.

எப்போதும் பரிசுத்த ஆவியுடன் இணைந்திருப்போமாக

நன்றி.
திராணி.

Comments