காதலர் தினம்

அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.
1 யோவான் 4:18
இன்று உலகம் எங்கும் ஒரு வேடிக்கையான தினமாக கொண்டாடுகின்றனர் அதுதாங்க காதலர் தினம்.
இதுல இன்னும் வேடிக்கை என்ன என்றால் மனைவி கஷ்டப்பட்டு வீட்டில் வேலை செய்வார்கள் பிள்ளைகள் இன்று விடுமுறை எனவே வீட்டு பக்கம் விளையாடிக்கொண்டிருப்பார்கள் கணவன் அது தாங்க குடும்ப தலைவன் கடலோரத்தில் காதலர் தினம் கொண்டாடுகிறார். சில வீட்டில் கணவன் கஷ்டப்பட்டு தூர இடத்தில் வேலைக்கு போயிருப்பார் மனைவி கடலோரத்தில் காதலர் தினம் கொண்டாடுகின்றனர். எதுங்க காதல்?
இன்று வாலிப பிள்ளைகள் நடன உடையோடு நகரத்தில் உலா வருகின்றனர், கடலோரத்தில் கண்ணாபூச்சி விளையாடுகின்றனர். கேட்டால் கூறுகின்றனர் இன்று காதலர் தினமாம் அதனால் தாங்கள் காதலர்களோடு ஊர் சுத்தி அன்பை பகிர்ந்து கொள்கின்றனராம். இதுல வேடிக்கை என்ன என்றால் வீட்டை விட்டு காதலர் தினம் கொண்டாட போன தன் பிள்ளை எப்படி, என்ன நிலமயில் வருமோ என பெற்றோருக்கு கவலை. ஒரு காதலரோடு ஊர் சுத்தும் போது அடுத்த காதலர் பார்த்துவிட்டால் நிலைமை என்ன ஆகுமோ என காதலருக்கு பயம்.
வேதம் கூறுகிறது அன்பில் பயம் இல்லையாம்
1 யோவான் 4:18 ல் இதை பார்க்கிறோம்
ஆம் சகோதரனே சாகோதரியே பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும் என அப்போஸ்தலன் கூறுகின்றார் இன்றைக்கு நாம் கொண்டாடுகின்ற அன்பு அதுதாங்க காதல் எப்படி பட்டது, நம்முடைய இன்றைய நிலை எப்படி காணப்படுகிறது.
வேதம் கூறுகிறது நம்முடைய அன்பு மாயமற்ற, சகோதர சிநேகமுள்ள, சுத்த இருதயத்தோடே கூடியதாக இருக்க வேண்டும்
1 பேதுரு - :22 ல் அப்போஸ்தலன் கூறுகின்றார்
ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிரு
க்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;
ஆம் சகோதரனே சாகோதரியே இந்த மாயமான, சுத்த இருதயமற்ற காதல் நமக்கு வேண்டாம்.
1 கொரிந்தியர் – 13 ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறியது போல அயோக்கியமானதைச் செய்யாத, தற்பொழிவை நாடாத, சினமடையாத, தீங்கு நினையாத, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படுகின்ற மாயமற்ற அன்பை தரித்தவர்களாய் ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருவோமா?
அன்பின் தேவன் நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்


Comments